80ஸ் வெ.இ அணியாலேயே முடியல.. இந்தியா கனவு காணாம இதை செய்யனும்.. கவாஸ்கர், மஞ்ரேக்கர் அறிவுரை

Sanjay Manjrekar
- Advertisement -

ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வரலாறு காணாத ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் குறைந்தது 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. ஆனால் சமீபத்தில் சொந்த மண்ணிலேயே இந்திய அணி நியூசிலாந்திடம் மோசமாக விளையாடி தோற்றது. அத்துடன் விராட் கோலி ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள்.

- Advertisement -

கவாஸ்கர் அட்வைஸ்:

இருப்பினும் கடைசி 2 தொடரை போல இம்முறையும் எப்படியாவது இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வெல்லும் என்று இங்குள்ள சில ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இந்நிலையில் 80களில் ஒட்டுமொத்த உலக அணிகளையும் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியாலேயே ஆஸ்திரேலியாவில் 4 – 0 என்ற கணக்கில் ஒரு தொடரை கூட வெல்ல முடியவில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எனவே நியூசிலாந்து தோல்வியிலிருந்து மீண்டெழுந்து ஆஸ்திரேலியாவில் சாதாரணமாக தொடரை வென்றாலே போதுமானது என்று இந்திய அணிக்கு அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி உட்பட உலகின் எந்த அணியும் ஆஸ்திரேலியாவை 4 – 0 என்ற கணக்கில் தோற்கடித்ததில்லை”

- Advertisement -

கனவாக இருக்கும்:

“எப்போதும் அணியை உயர்த்திப் பிடிக்கக்கூடிய ரோஹித் சர்மாவை இந்தியா தங்களுடைய கேப்டனாக கொண்டுள்ளது. ரிஷப் பண்ட் அழுத்தத்தை சமாளிக்கும் அற்புதமான திறமையைக் கொண்டுள்ளார். அவர் களத்திற்கு சென்று தன்னுடைய திறமைக்கு மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புவார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் என்ன நடந்தது என்பதை மறந்து விடுங்கள்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் பிடிச்சுட்டாரு.. அவருக்கு பதிலா ஓப்பனிங் இடத்தை கொடுங்க.. டிகே பேட்டி

“கடந்த சில தொடர்களைப் போல ஆஸ்திரேலியாவில் விஷயங்களைத் திருப்பி வெல்ல முடியும் என்று நம்புங்கள்” எனக் கூறினார். அதே நிகழ்ச்சியில் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியது பின்வருமாறு. “4 – 0 என்ற கணக்கில் வெல்வது தொலைவில் உள்ள கனவு. முதலில் ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். பெர்த், அடிலெய்ட் நகரில் நடைபெறும் முதல் 2 போட்டிகள் கடினமானது. ரோஹித், கோலி ஆகியோரில் யாராவது பெரிய ரன்கள் குவிக்க வேண்டும். ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement