127 ரன்ஸ்.. இந்தியாவை போல ரூட்டை மாற்றி.. 177.2 ஓவரில் வெ.இ அணியை முடித்த பாகிஸ்தான் வெற்றி

PAK vs WI
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி முல்தான் நகரில் ஜனவரி 17ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 230 ரன்கள் எடுத்து அவுட்டானது.

அதிகபட்சமாக சவுத் ஷாக்கில் 84, முகமது ரிஸ்வான் 71 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு ஜெய்டேன் சீல்ஸ், ஜோமேல் வேரிக்கன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி பாகிஸ்தான் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 31, ஜோமேல் வேரிக்கன் 22 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் அசத்தல்:

பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக நோமன் அலி 5, சஜித் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 52 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 7 விக்கெட்டுகளை எடுத்தார்.

இறுதியில் 251 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் சுமாராக விளையாடி 123 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது. அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 55 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சஜித் கான் 5, அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் 127 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்தியாவை போல:

முன்னதாக பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக பிட்ச் தார் ரோடு போல இருந்தன. அதை பயன்படுத்தி எதிரணிகள் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் துவம்சம் செய்து வெற்றி கண்டன. அதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் கடந்த இங்கிலாந்து தொடரில் இந்தியாவைப் போல பாகிஸ்தான் தங்களுடைய ரூட்டை மாற்றியது என்றே சொல்லலாம். அதாவது தற்போது பாகிஸ்தானில் உள்ள அனைத்து மைதானங்களிலும் டெஸ்ட் போட்டிகளுக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரோஹித் அகார்கர் ஒருபக்கம்.. கவுதம் கம்பீர் மறுபக்கம்.. இந்திய அணிக்குள் வெடித்த மோதல் – விவரம் இதோ

அதைப் பயன்படுத்தி இங்கிலாந்தை கடந்த மாதம் வீழ்த்திய பாகிஸ்தான் தொடர் தோல்விகளை நிறுத்தியது. அதே வரிசையில் தற்போது இப்போட்டி வெறும் 177.2 ஓவரில் 1064 பந்துகளில் முடிந்தது. இதன் வாயிலாக பாகிஸ்தான் மண்ணில் மிகவும் குறைந்த பந்துகளில் முடிந்த போட்டியாக இப்போட்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 1990 பைசலாபாத் நகரில் பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் போட்டி 1080 பந்துகளில் முடிந்ததே முந்தைய சாதனை. மேலும் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் 20 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் வீழ்த்தினார்கள்.

Advertisement