ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய அணியானது இழந்தது.
இந்திய அணிக்குள் வெடித்த சர்ச்சை :
அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது இந்திய அணி தயாராகி வருகிறது. இந்த தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்ததில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா, அஜித் அகார்கர் ஆகியோருக்கு இடையே மோதல் வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக வெளியான செய்திகளின்படி : இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் ஹர்திக் பாண்டியா தான் துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தாராம். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோர் சுப்மன் கில் தான் துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து அவருக்கு அந்த பதிவை அளித்துள்ளனர்.
அதேபோன்று ரிஷப் பண்டை தாண்டி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கம்பீர் கேட்டுக்கொண்டாரம். ஆனால் ரோஹித் மற்றும் ஆகார்கர் ஆகியோர் இருவரும் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பராக வேண்டும் என்று அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : கருண் நாயர் மட்டுமா? நிதிஷ் ரெட்டி மாதிரி அந்த 2 பேருக்கும் சீக்கிரம் சான்ஸ் கொடுங்க.. ரெய்னா கோரிக்கை
இப்படி இந்திய அணியின் பயிற்சியாளர் கோரிக்கைகளை இருவருமே நிராகரித்துள்ளதால் அவர்களுக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் வேளையில் தற்போது இந்திய அணி தேர்விலும் அவர்கள் மோதிக் கொண்டுள்ளது பலரது மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.