டி20 உலகக்கோப்பை : அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் – 2 அணிகள் இதுதான்

Cup
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12-சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் மீதமுள்ள நான்கு அணிகள் தகுதி சுற்று போட்டிகளின் அடிப்படையில் இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. அதன்படி 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரானது இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 6 அணிகள் விளையாடியது. இதில் இரண்டு குரூப்பிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்று அறிவிக்கப்பட்டது.

cup

- Advertisement -

அதன்படி தற்போது கிட்டத்தட்ட சூப்பர் 12-சுற்று நிறைவடைய உள்ள வேளையில் குரூப் 1-இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும், குரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஒரு போட்டியிலும் அரையிறுதி சுற்றில் மோத உள்ளன.

ஏற்கனவே இந்த தொடரில் இங்கிலாந்து அணி அசுர பலத்துடன் விளையாடி வருவதால் எளிதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என்றும் அதே போன்று பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலிய அணியை விட பலம் வாய்ந்ததாக திகழ்வதாலும் துபாய் மைதானத்தில் அவர்கள் இதுவரை தோற்காமல் விளையாடி வருவதால் நிச்சயம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று கூறப்படுகிறது.

pakvseng

அதுமட்டுமின்றி இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நிச்சயம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளே மோதும் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், நிபுணர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : உலககோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியதற்கு இவரே பதில் சொல்லனும் – கபில்தேவ் காட்டம்

மேலும் சமபலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையே மிகப் பெரிய பலமான போட்டி இறுதிப்போட்டியில் நிலவும் என்றும் நிச்சயம் அந்தப் போட்டி ஒரு ஹை ஸ்கோரிங் போட்டியாக அமையும், அதில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே கோப்பையை கைப்பற்றும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement