டி20 தொடரில் 2 வீரர்கள் அறிமுகமானது போல ஒருநாள் தொடரில் அறிமுகமாக இருக்கும் 2 வீரர்கள் – விவரம் இதோ

INDvsENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா தற்சமயம் ஆடி வரும் நிலையில், அடுத்து நடக்க இருக்கும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் எந்நேரமும் வெளிவரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதில் இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் பங்கு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

INDvsENG

- Advertisement -

பிரித்வி ஷா இந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் மொத்தமாக எட்டு இன்னிங்ஸ்களில் ஆடி உள்ளார். மொத்தமாக 865 ரன்களை 165.40 என்கிற அபாரமான ஆவரேஜ் விகிதத்தில் அடித்து அசத்தி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் ஒரு 200 , 4 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் என அபாரமாக அடித்து அனைவரது கவனத்தையும் இவரது பக்கம் திருப்பியிருக்கிறார்.

மேலும் கேப்டனாக இந்த தொடரில் காலிறுதி போட்டியில் அடித்த சதம் (185*) மற்றும் அரையிறுதிப் போட்டியில் சதம் (165) எடுத்ததோடு மட்டுமல்லாமல் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சிறப்பான தொடக்கம் (77 ரன்கள் ) கொடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்து கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்.

shaw 2

மற்றொரு பக்கம் படிக்கல்லும் அபாரமாக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். மொத்தமாக ஏழு இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள படிக்கல் 737 ரன்களை 147.40 என்கிற ரன் ரேட் ஆவரேஜ் விதத்தில் குவித்துள்ளார். முதல் நான்கு இன்னிங்சில் தொடர்ச்சியாக 4 சதங்களும் மற்றும் மீதமுள்ள 3 இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்களும் அடித்து அனைவரது கவனத்தையும் பெற்று உள்ளார்.

- Advertisement -

Padikkal

இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 தொடருக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் இப்போதே தயாராகி வருகிறது. திறமையான வீரர்களை தேர்வு செய்து இந்த ஆண்டு கோப்பையை நிச்சயம் கைப்பற்ற இப்பொழுதே திட்டங்களை ஒரு பக்கம் தீட்டி வருகிறது. இந்நிலையில் டி20 தொடரில் இஷான் கிஷன் மற்றும் சூரிய குமார் யாதவை வைத்து பரிசோதனை செய்து பார்ப்பது போல் ஒருநாள் தொடரிலும் இவர்கள் இருவரையும் உள் இழுத்து இவர்களது பெர்பாமன்ஸ்களை பிசிசிஐ கூர்ந்து கவனிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனினும் இவர்களுக்கு டி20 தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காத நிலையில் நிச்சயம் இந்த ஒருநாள் தொடரில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கப் போவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement