நிச்சயம் யுவியால் முடிந்திருக்காது, தோனியால் மட்டுமே முடியும் – 2011 உலககோப்பை பைனல் பற்றி முன்னாள் கோச்

- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா வென்று சாதனை படைத்ததை இந்திய ரசிகர்கள் காலத்துக்கும் மறக்க மாட்டார்கள். ஏனெனில் கடந்த 1983-ஆம் ஆண்டு ஜாம்பவான் கபில்தேவ் தலைமையில் முதல் முறையாக உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அதன்பின் முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கேப்டன்ஷிப் செய்தபோதும் இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

அப்படியே காலம் உருண்டோட 28 வருடங்களுக்கு பின் கடந்த 2011-ஆம் ஆண்டு அதுவும் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையில் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற இளமையும் சச்சின் டெண்டுல்கர், சேவாக், ஜாகீர் கான் போன்ற அனுபவம் கலந்த இந்திய அணி விளையாடியது. அதில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா காலிறுதியில் நடப்பு சாம்பியன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதியில் பரம எதிரியான பாகிஸ்தானை பந்தாடி பைனலுக்கு தகுதி பெற்றது.

பைனலில் மின்னிய தோனி:
அதை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் கோப்பைக்காக பலப்படுத்திய நடத்திய இலங்கை முதலில் பேட்டிங் செய்து 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியாவிற்கு வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் அடுத்து களமிறங்கிய கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து இந்தியாவை மீட்க போராடினார்கள்.

worldcup2011

அதில் முக்கியமான நேரத்தில் விராட் கோலி அவுட்டானதால் 114/3 என திடீரென தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக யுவராஜ் சிங் களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அதுவரை அந்த உலகக் கோப்பையில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் படுமோசமான பார்மில் திண்டாடிய கேப்டன் எம்எஸ் தோனி களமிறங்கி கௌதம் கம்பீருடன் இணைந்து அபாரமான பேட்டிங் செய்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

அதிலும் 97 ரன்கள் எடுத்து பொறுப்புடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த கௌதம் கம்பீர் கடைசி நேரத்தில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய யுவராஜ் உடன் ஜோடி சேர்ந்த எம்எஸ் தோனி அதிரடியாக விளையாடி 91* ரன்கள் அடித்து அபார பினிஷிங் கொடுத்ததால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 28 ஆண்டுகள் கழித்து கோப்பையை வென்று சாதனை படைத்தது. சொந்த நாட்டு ரசிகர்களுக்கு முன்னிலையில் உலக கோப்பையை முத்தமிட்ட இந்தியா வரலாற்றிலேயே முதல் உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற மாபெரும் சாதனையும் படைத்தது.

2011-final

அந்த அபார வெற்றிக்கு அதிரடியாக 91* ரன்கள் குவித்து அபார பினிஷிங் செய்து முக்கிய பங்காற்றிய எம்எஸ் தோனி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அந்த தருணம் நிகழ்ந்து 10 வருடங்களுக்கு மேல் கடந்த போதிலும் அந்த பைனலில் யுவராஜ் சிங்க்கு முன்பாக தோனி களமிறங்கியது யாரின் முடிவு என்பது போன்ற பல செய்திகள் கடந்த பல வருடங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

- Advertisement -

அந்த வகையில் 2011 ஏப்ரல் 2-ஆம் தேதியன்று நிகழ்ந்த அந்த சரித்திர வெற்றியின் 11-வது ஆண்டை கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதியன்று நிறைய இந்திய ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்போது அந்த நாளில் நடந்த தருணங்களை சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் அந்தப் போட்டியில் இடம் வகித்தவர்களும் நினைவு கூர்ந்தார்கள். அந்த வகையில் அந்த மாபெரும் பைனலில் யுவராஜ் சிங்கும் முன்பாக எம்எஸ் தோனி களமிறங்கியது ஏன் என்பது பற்றி அப்போதைய இந்திய அணி வீரர்களின் மனநிலை ஆலோசகராக இருந்த பேடி அப்டோன் தெரிவித்துள்ளார்.

worldcup

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு வெள்ளை பந்து போட்டியின் 2வது இன்னிங்சில் சொந்த நாட்டை சேர்ந்த ஒரு அணி சேசிங் செய்யும் போது அந்த விஷயத்தை (பினிஷிங்) உலகிலேயே சிறப்பாக செய்யக் கூடியவராக இருக்கும் அவர் செய்பவராக இருந்தார். பைனலுக்கு முன்பு நடந்த 8 போட்டிகளிலும் அவர் எதுவும் பெரிதாக அடிக்கவில்லை. மறுபுறம் யுவராஜ் சிங் தனக்கே உரித்தான பாணியில் தொடர் முழுக்க சிறப்பாக விளையாடினார். அவர் அந்த தொடர் முழுக்க தம்மால் முடிந்த அளவுக்கு முழுமூச்சுடன் சிறப்பாக விளையாடி முடித்து விட்டார். எனவே பினிஷிங் செய்வதற்கு ஏற்றார்போல் உருவான அந்த தருணம் எம்எஸ் தோனி போன்ற ஒருவருக்காக உருவானது. இந்த உலகிலேயே ஒரு சில வீரர்கள் மட்டும் தான் மிகவும் அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்கி விளையாடக்கூடிய வீரர்களாக உள்ளனர். அந்த பட்டியலில் யுவராஜ் சிங் ஒருவர் கிடையாது. ஆனால் அதில் தோனி ஒருவர்” என கூறினார்.

- Advertisement -

அதாவது லீக் சுற்று, காலிறுதி என அந்தத் தொடர் முழுவதும் தனது அபார திறமையால் முழு மூச்சுடன் செயல்பட்ட யுவராஜ் சிங் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் அதிலும் இந்தியா தடுமாறிய அந்த அழுத்தம் நிறைந்த நேரத்தில் களமிறங்கி சிறப்பாக செயல்படக் கூடிய மனநிலை கொண்டவராக இல்லை என்று பேடி அப்டோன் கூறியுள்ளார். மறுபுறம் அந்தத் தொடர் முழுவதும் பெரிய அளவில் சோபிக்காமல் புத்துணர்ச்சியுடன் மனதளவில் தெம்பாக இருந்த எம்எஸ் தோனி அந்த பைனலில் அழுத்தத்தை தாங்கி விளையாடக் கூடியவராக இருந்ததால்தான் முன்கூட்டியே களமிறங்கியதாக தெரிவித்துள்ளார்.

Padyy Upton Sachin Tendulkar 2011 World Cup

மேலும் பைனல் போன்ற மாபெரும் அழுத்தம் நிறைந்த இறுதிப் போட்டியில் நிலவும் அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்கும் ஒரு வீரராக யுவராஜ் சிங் இல்லை எனக் கூறியுள்ள அவர் எம்எஸ் தோனி அது போன்ற சூழ்நிலையை சமாளித்து விளையாடக் கூடியவர் என தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அந்த தருணம் அவரது தலைமை மற்றும் தைரியத்திற்கு ஒரு சான்றாகும். அது பயிற்சியாளர் கேரி கிறிஸ்டின் உடனான அவரது உறவைப் பற்றி நிறைய பேசியது.

இதையும் படிங்க : 10 வருசம் ஆச்சு, இப்படியே ஆடுனா இந்தியன் டீம்ல இடம் கிடைக்காது – முக்கிய வீரரை விளாசும் ரவி சாஸ்திரி

தோனி படிக்கட்டுகளில் இறங்கி நடந்து செல்லும்போது, ​​நான் கேரி க்ரிஸ்டன் பக்கம் திரும்பி, “தோனி நமக்கு உலகக் கோப்பையைக் கொண்டு வரப் போகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என கூறினேன். ஏனெனில் தோனி மீண்டும் கோப்பையுடன் வருவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement