49க்கு அவுட்.. ஆர்சிபி’க்கு ஜோடியாக பார்ல் ராயல்ஸ் மோசமான சாதனை.. சன்ரைசர்ஸ் மிரட்டல் வெற்றி

Paarl Royals
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரின் 2025/26 சீசன் துவங்கி நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் டிசம்பர் 27ஆம் தேதி பார்ல் மைதானத்தில் 3வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் கிளை அணிகளான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ஸ் ராயல்ஸ் அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 186/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோர்டன் ஜெர்மன் அதிரடியாக 62* (28) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் குவிண்டன் டீ காக் 42 (24), ஜானி பேர்ஸ்டோ 31 (35), மேத்தியூ பிரெட்ஸ்கே 31 (23) ரன்களை எடுத்தனர்.

- Advertisement -

49க்கு ஆல் அவுட்:

பார்ல் ராயல்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ஓட்னல் பார்ட்மேன் 2 அடுத்து சாய்த்தார். அடுத்து விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு டிரே பிரிட்டோரிஸ் 2, விசேன் ஹலம்பேக் 5, ரூபின் ஹெர்மன் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 10/3 என சரிந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கெய்ல் வேர்ரைன் 11, ஆசா ட்ரைப் 14, கேப்டன் டேவிட் மில்லர் 7 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்கத் தவறினார்கள்.

லோயர் ஆர்டரில் டிலேனோ போட்கெட்டர் 4, போர்சுன் 1 ரன்களில் அவுட்டாகி கதையை முடித்தார்கள். இறுதியில் 11.5 ஓவரில் வெறும் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டான பார்ல் ராயல்ஸ் படுதோல்வியை சந்தித்தது. அத்துடன் 2022 முதல் நடைபெற்று வரும் எஸ்ஏ20 தொடரில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையையும் பார்ல் படைத்துள்ளது.

- Advertisement -

ஆர்சிபி அணிக்கு ஜோடியாக:

அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் ஆர்சிபி அணிக்கு ஜோடியாக தென்னாப்பிரிக்காவில் ஒரு அணி கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் கலகலப்பான கருத்தை தெரிவிக்கிறார்கள். ஏனெனில் ஐபிஎல் தொடரில் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக மோசமான சாதனை படைத்துள்ளது. தற்போது அதே போல 49க்கு அவுட்டாகியுள்ள பார்ல் ராயல்ஸ் தென்னாப்பிரிக்கா தொடரில் மோசமான சாதனைப் படைத்துள்ளது.

இதையும் படிங்க: கடவுள் வாய்ப்பளித்த 24 கேரட் கோலியை டெஸ்டில் மறுபடியும் விளையாட வைப்பேன்.. இதான் காரணம்.. சித்து

அதனால் சமூக வலைதளங்களில் அதை வைத்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். மறுபுறம் 137 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 4, ஆடம் மில்னே 2, தரிண்டோ ரத்னநாயக்கே 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இந்த மிகப்பெரிய வெற்றியால் சன்ரைசர்ஸ் போனஸ் புள்ளிகளை பெற்றது.

Advertisement