
இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இருபெரும் ஜாம்பவான்கள் இந்திய அணியில் இருந்து விலகியதால் அடுத்த தலைமுறை வீரர்கள் இந்திய அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பு இந்த இங்கிலாந்து தொடரிலிருந்தே ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் விராட் கோலியின் நான்காவது இடத்தில் தற்போது கேப்டன் சுப்மன் கில் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆனாலும் சுப்மன் கில்லை விட கே.எல் ராகுல் தான் விராட் கோலியின் நிழலாக இருந்து இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான உவைஸ் ஷா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் நிழலாக இனி இந்திய அணியில் கே.எல் ராகுல் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் விராட் கோலி அணியில் இருக்கும் போது எவ்வாறு முதன்மை பேட்ஸ்மேனாக இருந்து இந்திய அணியை சிறப்பாக கொண்டு சென்றாரோ அதேபோன்று தற்போது கே.எல் ராகுல் அந்த பணியை கையில் எடுப்பார் என்று நினைக்கிறேன். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலும் அவர் இரண்டு சதங்களுடன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இன்னும் அடுத்த பத்து பதினைந்து ஆட்டங்களில் அவர் மேலும் சிறப்பான பார்மை வெளிப்படுத்தி அடுத்த விராட் கோலியாக மாறுவார் என்று நினைக்கிறேன். தற்போதைய இந்திய அணியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது கே.எல் ராகுல் தான். அவரால் டெஸ்ட் போட்டிகளில் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸை விளையாட முடியும் .எனவே சுப்மன் கில்லை விட பெரிய வீரராக கே.எல் ராகுலே இந்திய அணியில் தொடர்வார் என உவைஸ் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜிதேஷ் சர்மாவை லார்ட்ஸ் மைதானத்துக்குள் நுழைய விடாத செக்யூரிட்டி.. காப்பாற்றிய டிகே – உண்மையில் நடந்தது என்ன?
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் விளையாடியுள்ள கே.எல் ராகுல் இரண்டு சதங்களுடனும், 62 ரன்கள் சராசரியுடனும் 375 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.