தினேஷ் கார்த்திக்கின் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து சொன்ன முரளிவிஜயை – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

karthik
- Advertisement -

இந்திய அணி நிடாஸ்கோப்பையை வென்றதற்கு காரணம் தினேஷ் கார்த்திக் தான் என்று சச்சின்,சேவாக்,யுவராஜ்,கங்குலி போன்ற பல வீரர்கள் தினேஷ் கார்த்திக்கை வாழ்த்தி டிவிட்டரில் பதிவிட இந்திய ரசிகர்களும் தினேஷ் கார்த்திக்கை வாழ்த்து மழையால் நனைத்து விட்டனர்.

vijay

- Advertisement -

ஆனால் இந்திய கிரிக்கெட் வீரரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் தன்னுடைய வாழ்த்து பதிவில் தினேஷ் கார்த்திக்கின் பெயரை குறிப்பிடாமல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்ற விதத்தில் பதிவிட்டிருந்தார்.

தினேஷ் கார்த்திக்-முரளிவிஜய் இருவருக்குமிடையே சொல்லிக்கொள்ளும் படியான உறவு இல்லை.இதற்கு காரணம் தினேஷ் கார்த்திக்கின் மனைவியை தான் முரளிவிஜய் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.அப்போது முதலே இருவருக்குமிடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.

DK

இந்நிலையில் தற்போது முரளிவிஜய் தினேஷ் கார்த்திக்கின் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து சொல்லாததற்கு நெட்டிசன்கள் முரளி விஜயை கண்டித்து வருகின்றனர்.பலரும் முரளிவிஜய் நீங்கள் இன்னும் வளரவேண்டும். நீங்கள் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்பதை தவிர்த்து அணிக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்தது ஏன் !! வளருங்கள் விஜய் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement