ஆஸ்திரேலிய சூழ்நிலைக்கேற்ப அல்லாமல் ரிஸ்க் எடுக்குறாங்க – டி20 உ.கோ இந்திய அணி பற்றி நட்சத்திர ஆஸி வீரர் கருத்து

India Rohit Sharma
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் சமீபத்திய ஆசிய கோப்பையில் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேரிட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் காயத்தால் விலகிய ரவீந்திர ஜடேஜா இந்த அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அதை தவிர சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் பல வருடங்களாக வாய்ப்புக்காக ஏங்கி வரும் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட இடம் பெறாததும் நிறைய ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

IND

- Advertisement -

அதைவிட சமீபத்திய ஆசிய கோப்பையில் ரன்களை வாரி வழங்கியதால் அதிரடியாக நீக்கப்பட்ட ஆவேஷ் கானுக்கு பதிலாக தேர்வு செய்ய அணியில் எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்திய அவல நிலை தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதனால் முகமது ஷமி மற்றும் தீபக் சஹர் ஆகியோரை டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது தெரிந்தும் யாருடைய கோரிக்கையையும் ஏற்காத தேர்வுக்குழு ஷமி மற்றும் சஹர் ஆகியோரை ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே சேர்த்துள்ளது மீண்டும் ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

ரிஸ்க் எடுக்குறிங்க:
ஏனெனில் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகிய 4 முழுநேர வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் தேர்வுக்குழு பஞ்சமாக தேர்வு செய்துள்ளது. இருப்பினும் உலகக் கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலிய மண்ணில் இயற்கையாகவே வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியன இருக்கும் என்பதால் சுழல் பந்துவீச்சை விட வேகப்பந்து தான் எடுபடும் என தெரிந்தும் தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது நிறைய கேள்விகளை எழுப்பி வருகிறது.

shami

இந்நிலையில் வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஈடுகொடுத்து விளையாட 5 வேகப்பந்து வீச்சாளர்களை இந்தியா தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கும் அவர் தெரிந்தே இந்த உலக கோப்பையில் இந்தியா ரிஸ்க் எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களிடம் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மற்றும் 2 சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது ரிஸ்க் ஆகும். அந்த வகையில் இந்தியா 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டராக (3வது வேகப்பந்து வீச்சாளர்) ஹர்திக் பாண்டியாவையும் 2 சுழல் பந்து வீச்சாளர்களையும் வைத்து விளையாட நினைக்கிறது”

“ஆனால் ஆஸ்திரேலியாவில் நீங்கள் உறுதியாக 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாட வேண்டும். அதிலும் பெர்த் போன்ற சூழ்நிலைகளை கொண்ட மைதானங்களில் நீங்கள் விளையாடினால் உங்களுக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம் தேவைப்படும். இந்தியாவும் இந்த வகையில் தான் திட்டமிட்டு விளையாடப் போகிறது என்றாலும் அவர்கள் அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது கொஞ்சம் ரிஸ்க் எடுப்பதை காட்டுகிறது” என்று கூறினார்.

அத்துடன் இந்தியா தேர்வு செய்துள்ள பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர எஞ்சிய 3 பேரும் 140 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசுவதற்கு தடுமாறுவார்கள் என்பதும் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுத்துவதாக அமைகின்றது. இருப்பினும் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வேண்டும் என்ற அவசியமில்லை என்று தெரிவிக்கும் மிட்செல் ஜான்சன் விவேகத்துடன் செயல்பட்டாலே ஆஸ்திரேலியாவில் வெற்றி காணலாம் என்று கூறியுள்ளார்.

Team India Jasprit Bumrah

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “145 கி.மீ வேகத்தில் அனைவரும் வீச வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது வேடிக்கையானது. மேலும் ஒருவர் அந்த வேகத்தில் வீசினால் மற்றொருவர் அதே வேகத்தில் வீச வேண்டிய அவசியமில்லை. அத்துடன் பல்வேறு வேகத்தில் பவுலர்கள் இணைந்து செயல்படுவதே முக்கியமானது” என்று கூறினார்.

Advertisement