யாரையும் சாதிக்க விடமாட்டீங்க அப்படித்தான.. மீண்டும் பாண்டியாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

Pandya and Aswani
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணி பின் தங்கியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

மீண்டும் விமர்சனத்தை சந்தித்துள்ள ஹார்டிக் பாண்டியா :

இவ்வேளையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தங்களது மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 121 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக அறிமுக வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கிய 23 வயதான அஸ்வனி குமார் 3 ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதிலும் குறிப்பாக தான் வீசிய அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே வீழ்த்தி சாதனை நிகழ்த்தி இருந்தார். அதுமட்டும் இன்றி கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்களான ரிங்கு சிங், மனிஷ் பாண்டே, ஆண்ட்ரே ரசல் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தார். இப்படி அறிமுக போட்டியிலேயே அசத்திய அஸ்வனி குமார் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்த வேளையில் இந்த போட்டியில் கேப்டன்சி செய்த ஹார்டிக் பாண்டியாவின் மீது தற்போது ரசிகர்கள் காட்டமான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் நேற்றைய போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் 3 ஓவர்களில் 4 விக்கெடுகளை வீழ்த்தியும் அவருக்கு நான்காவது ஓவரை ஹார்திக் பாண்டியா வழங்கவில்லை. ஒருவேளை அவர் அந்த கடைசி ஓவரை வீசியிருந்தால் நிச்சயம் அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்த வாய்ப்பிருந்திருக்கும்.

இதையும் படிங்க : “பவர்பிளே கிங்” டிரென்ட் போல்ட் நிகழ்த்திய வரலாற்று சாதனை.. முதல் ஓவரில் மேஜிக்கை நிகழ்த்தும் மெஜிஷியன்

ஆனால் எந்தவொரு தான் இருக்கும் போது சாதனையை நிகழ்த்தக்கூடாது என்பதில் உன்னிப்பாக இருக்கும் பாண்டியா தான் அதனை தடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வனி குமார் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement