இந்திய வீரரான இவரை வீழ்த்தியது என்னால் எப்போவுமே மறக்கமுடியாத ஒன்று – ஒல்லி ராபின்சன் பேட்டி

Robinson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஏற்கனவே தனது பழைய ட்வீட்டால் சர்ச்சைக்கு உள்ளாகி தடைசெய்யப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் மீண்டும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டார். அவரது பந்துவீச்சு இந்த தொடரிலும் இதுவரை சிறப்பாகவே இருந்து வருகிறது.

Ollie Robinson 3

- Advertisement -

2வது டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 33 ஓவர்கள் பந்துவீசி 73 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அவர் எடுத்த இந்த 2 விக்கெட்டுகளும் மிக முக்கியமான விக்கெட்டுகள் தான்.

இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அண்மையில் அறிமுகமான ராபின்சன் பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார்.

robinson

இந்நிலையில் தான் தற்போது இந்திய அணிக்கு எதிராக வீழ்த்திய ஒரு விக்கெட் என் வாழ்நாளில் மறக்க முடியாத விக்கெட் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கோலியின் விக்கெட் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை அனைத்து பவுலர்களுக்கும் உண்டு. அந்த வகையில் எனக்கு அந்த ஆசை இருந்தது. பொதுவாக நான்காவது ஐந்தாவது ஸ்டம்பில் பந்து வீசினால் கோலியின் விக்கெட் கிடைக்கும் என்று நினைத்தேன்.

robinson 1

அந்த வகையில் கோலி என்னுடைய பந்தை எதிர் கொள்ளும்போது எட்ஜாகி ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட் வீழ்த்தியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம். நான் அதை எளிதில் மறந்து விட முடியாது. நான் வீழ்த்தியத்திலேயே மிகப்பெரிய விக்கெட்டாக விராட் கோலியின் விக்கெட்டை நினைப்பதாக ராபின்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement