21 டெஸ்ட் 2018க்குப்பின்.. சுழல் பூமியில் சாதித்து திருப்பி அடிக்கும் போப்.. போராடும் இங்கிலாந்து.. நெருக்கடியில் இந்தியா?

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி துவங்கியது. ஹைதராபாத் நகரில் நடைபெறும் அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் தடுமாற்றமாக விளையாடி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அஸ்வின் 3, ஜடேஜா 3, அக்சர் பட்டேல் 2, பும்ரா 2 விக்கெட்களை எடுத்தார்கள். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 24, சுப்மன் கில் 23 ரன்களில் அவுட்டானாலும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 10 பவுண்டரி 3 சிக்சருடன் 80 (74) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

போராடும் போப்:
அதே போல அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களில் அவுட்டானாலும் கே.எல் ராகுல் கிளாஸ் நிறைந்த அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ரன்கள் குவித்து அவுட்டானார். அவரைத்தொடர்ந்து கேஎஸ் பரத் 41 ரன்களில் அவுட்டானாலும் ரவீந்திர ஜடேஜா நங்கூரமான பேட்டிங் செய்து 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 190 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 31, பென் டுக்கெட் 47 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள். இருப்பினும் அடுத்ததாக வந்த ஓலி போப் நிதானமாக பேட்டிங் செய்த நிலையில் எதிர்புறம் ஜோ ரூட் 2, ஜானி பேர்ஸ்டோ 10, பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து பின்னடவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அரை சதம் கடந்த அசத்திய ஓலி போப்புடன் அடுத்ததாக சேர்ந்த பென் ஃபோக்ஸ் 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு தொல்லையை கொடுத்த போது 34 ரன்களில் அக்சர் பட்டேல் அவுட்டாக்கினார். ஆனாலும் இந்த பக்கம் சிம்ம சொப்பனமாக மாறிய ஓலி போப் 2018க்குப்பின் 5 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்ட் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்து அசத்தினார்.

இதையும் படிங்க: 26 சிக்ஸ்.. 366 ரன்ஸ்.. 202.21 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆப்கன், நியூசிலாந்து வீரர்களை மிஞ்சிய இந்திய வீரர்.. புதிய 2 உலக சாதனை

அவருடைய ஆட்டத்தால் 200 ரன்கள் கடந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த இங்கிலாந்து 21 போட்டிகளுக்கு பின் இந்திய மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் 200 ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றது. அந்த வகையில் திருப்பி அடிக்கும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 316/6 ரன்கள் குவித்து இந்தியாவை விட 126 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் போராடி வருகிறது. களத்தில் போப் 148*, ரெஹன் 16* ரன்களுடன் உள்ள நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். எனவே அந்த அணியை 300 ரன்கள் இலக்கை நிர்ணயிக்கவிடாமல் இந்தியா நாளை விரைவாக 4 விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement