அலைஸ்டர் குக்கின் 12 ஆண்டுகால சாதனையை முறியடித்து இந்திய மண்ணில் வரலாறு படைத்த – ஒல்லி போப்

Pope
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த போட்டியானது மூன்றாம் நாளிலேயே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டியின் நான்காம் நாளான இன்றும் இரு அணிகளும் கடுமையான போட்டியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 246 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து தங்களது முதல் இன்னிங்சில் 436 என்கிற பெரிய ரன் குவிப்பை வழங்கியிருந்தது. இதன் காரணமாக 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி எளிதில் இந்திய அணியின் பந்துவீச்சில் விழுந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஒல்லி போப்பின் மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணியானது தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சில் 420 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணிக்கு 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரரான ஒல்லி போப் 278 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரிகளுடன் 196 ரன்களை குவித்துள்ளார். அவர் அடித்த இந்த 196 ரன்கள் மூலம் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான அலைஸ்டர் குக்கின் 12 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி தனது கேரியரில் ஒருமுறை கூட அங்க போனதில்ல.. எல்லாரும் அவர பாத்து கத்துக்கணும்.. ரோஹித் பாராட்டு

அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்திய மண்ணில் இங்கிலாந்து வீரராக இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை அடித்த வீரராக முதலிடத்தில் இருந்த அலைஸ்டர் குக்கை பின்னுக்கு தள்ளி தற்போது ஒல்லி போப் 196 ரன்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement