டெஸ்ட் கிரிக்கெட்டில் விசித்திரமான சாதனையை நிகழ்த்திய இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் – விவரம் இதோ

Pope
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து கேப்டன் படைத்த சாதனை :

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஒல்லி போப் 103 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் அடித்த சதம் மூலம் இங்கிலாந்து அணியின் கேப்டனான ஒல்லி போப் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விசித்திரமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் இலங்கையை அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் அவரது டெஸ்ட் கரியரின் ஏழாவது சதமாகும். இதில் அவர் படைத்த சாதனை யாதனில் : இந்த ஏழு சதங்களும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக வந்தவை.

- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஒல்லி போப் அதற்கு அடுத்து நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் என ஆறு அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : இந்தியாவை அந்த ஐசிசி தொடரில் வீழ்த்துவோம்.. அதுக்கான முன்னோட்டம் தான் இது.. கேமரூன் க்ரீன் நம்பிக்கை

தற்போது இலங்கை அணிக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் தனது கரியரின் முதல் ஏழு சதங்களையும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே அவரது பேட்டிங் மீது சில விமர்சனங்கள் இருந்த வேளையில் இந்த சதத்தின் மூலம் அவர் தன் மீது உள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement