இந்தியாவை அந்த ஐசிசி தொடரில் வீழ்த்துவோம்.. அதுக்கான முன்னோட்டம் தான் இது.. கேமரூன் க்ரீன் நம்பிக்கை

Cameroon Green
- Advertisement -

2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. ஏனெனில் வலுவான ஆஸ்திரேலியாவை கடைசியாக அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட 2 தொடர்களிலும் இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்தது.

அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையும் இந்தியா நிகழ்த்தியது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் இம்முறை இந்தியாவை தோற்கடிப்போம் என்று ரிக்கி பாண்டிங் முதல் நேதன் லயன் வரை முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஐசிசி ஃபைனலுக்கு முன்னோட்டம்:

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற போராடுவோம் என்று ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார். அத்துடன் 2023 போல மீண்டும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை எதிர்கொள்வோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அப்படி நடந்தால் 2025 ஃபைனலில் மீண்டும் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியனாக ஆஸ்திரேலியா சாதனை படைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாகவே 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை பார்ப்பதாக தெரிவிக்கும் க்ரீன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது எப்போதுமே ஒரு அற்புதமான போட்டி என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

வெல்லப்போவது யார்:

“ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒருவருக்கொருவர் விளையாடும் போது நிறைய விஷயங்களில் தரமான போட்டி வெளியே வரும். எனவே அந்தத் தொடர் எந்த வகையிலும் குறையாது என்று நான் உறுதியாக சொல்வேன். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக ஒவ்வொரு புள்ளியும் மிகவும் முக்கியமானது. அதற்காக எதிரணியை வீழ்த்துவதற்கு தேவையான யோசனைகளை பெற முயற்சிப்போம்”

இதையும் படிங்க: 7 நாடுகள் 7 சதங்கள்.. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத தனித்துவ சாதனையை படைத்த ஓலி போப்

“இந்த தொடர் கொஞ்சம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு முன்னோட்டமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்காக இந்தியாவிலிருந்து நாங்கள் பல தகவல்களை பெற முயற்சித்து வருகிறோம். அதை மீண்டும் எப்படி வெல்வது என்பதை பற்றி பார்க்கிறோம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement