ஒன்டே கிரிக்கெட் என்பது தூண் மாதிரி. அது எப்போதும் அழியாது, வாசிம் அக்ரமுக்கு முன்னாள் பாக் வீரர் பதிலடி

Akram
- Advertisement -

ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகளாக மட்டும் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக 50 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டிகளாகவும் 20 போட்டிகளாகவும் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. இதை வளர்ச்சி என்று கூறுவதை விட வீழ்ச்சி என்று தான் கூற வேண்டும். ஏனெனில் 20 ஓவர் போட்டிகளில் வருகையால் அதுவரை விளையாடப்பட்டு வந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மவுசு குறைந்தது. போதாகுறைக்கு ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் உலகம் முழுவதிலும் வந்ததால் தற்போது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. காரணம் அந்த டி20 தொடர்களில் மெஷின்களை போல் பங்கேற்றுவிட்டு விட்டு நாட்டுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் திறம்பட விளையாடுவது வீரர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

worldcup

- Advertisement -

அதனால் பணிச்சுமையால் பாதிக்கப்படும் வீரர்கள் பணத்திற்காக டி20 கிரிக்கெட் தங்களது தரத்தை நிரூபிக்க டெஸ்ட் கிரிக்கெட் என்ற வகையில் தேர்வு செய்து விளையாடுவதால் அந்த இரண்டுக்கும் இடையில் நிற்கும் ஒருநாள் கிரிக்கெட்டை விரும்புவதில்லை. மேலும் 5 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் முடிவு மாறலாம் என்ற வகையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளையும் ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் டி20 போட்டிகளையும் விரும்பும் இப்போதைய ரசிகர்கள் இரண்டுக்கும் நடுவே எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும் ஒருநாள் போட்டிகளை விரும்புவதில்லை.

அழிவில் ஒன்டே:
அதிலும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது பலருக்கும் அதிர்ச்சியையும் நிறைய விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் புதுமையை கொண்டு வர வேண்டும் அல்லது மொத்தமாக நிறுத்த வேண்டும் என்ற கருத்துகள் வரத்தொடங்கியுள்ளன. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டை மொத்தமாக நிறுத்திவிடலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

wasimakram

இருப்பினும் என்னதான் டி20 மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகள் வந்தாலும் கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை என்றாலே 50 ஓவர் போட்டிகளை கொண்ட உலகக்கோப்பை தான் அனைவருக்கும் கருதுகிறார்கள். எனவே அது நடைபெறுவதற்கு ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இந்த நிலைமையில் ஒருநாள் போட்டிகளே கிரிக்கெட்டின் தூண் என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதில் 500 விக்கெட்டுகள் எடுத்துள்ள நீங்களே இப்படி பேசலாமா என்ற வகையில் வாசிம் அக்ரமுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

கிரிக்கெட்டின் தூண்:
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சில வீரர்கள் தங்களுக்கு பிடித்த போட்டிகளை தேர்வு செய்யலாம். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வித்தியாசம் என்னவெனில் உலகம் முழுவதிலும் 20 ஓவர் போட்டிகளின் அடிப்படையில் பிரீமியர் லீக் தொடர்கள் பணத்துக்காக நடைபெற்று வருகின்றன. அதனால் அவர்கள் அதை புறக்கணிக்க மாட்டார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் மிகப்பெரிய தொடராகும், அதை மையப்படுத்தி எந்த லீக் தொடர்களும் கிடையாது. எனவே ஒருவர் பணிச்சுமையால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றால் அது அவர்களது விருப்பம். அதன் வாயிலாக அவர்களும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த முடியும்”

Butt

“ஆனால் ஒருநாள் போட்டிகள் கிரிக்கெட்டின் தூணாகும். எனவே அதை நிறுத்த நான் எப்போதும் விரும்ப மாட்டேன். அந்த கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் பெரிய சாதனைகள் படைத்து உள்ளனர். மேலும் உலக சாம்பியனை அந்த கிரிக்கெட்டின் இருந்து தேர்வு செய்த காலங்களும் உண்டு. மேலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் உங்களது நுணுக்கம் மற்றும் உட்படுத்திக் கொள்ளும் திறமையை சோதிக்கும் என்பதால் அந்த இரண்டுக்குமே நான் ஆதரவு தெரிவிக்கிறேன். இருப்பினும் ஒருநாள் போட்டிகளும் இருக்க வேண்டும்”

- Advertisement -

“இது பற்றி அனைவரின் கருத்துக்களையும் நான் மதிக்கிறேன். வாசிம் பாய் எங்களது ஜாம்பவான். அவருடைய கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அவர் 500 விக்கெட்டுகளை ஒருநாள் கிரிக்கெட்டில் தான் எடுத்துள்ளார். குறிப்பாக உலக கோப்பையில் அவர் வீசிய அந்த 2 பந்துகளையும் எப்போதும் மறக்க முடியாது. அதை நீங்கள் டி20 கிரிக்கெட்டில் பார்க்க முடியாது. ஏனெனில் அதில் நிறைய நேரம் கிடையாது. அவர் உலக கோப்பை இறுதி போட்டியில் தான் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க : 2023 உலகக்கோப்பையுடன் பாண்டியா ரிட்டையர் ஆகிடுவாரு. பின்னணியை பகிரும் முன்னாள் கோச் – ரசிகர்கள் அதிர்ச்சி

மொத்தம் 502 விக்கெட்டுகளை எடுத்து 1992 உலக கோப்பை இறுதி போட்டியில் 2 மகத்தான ஸ்விங் பந்துகளை வீசி ஆட்டநாயகன் விருது வென்று கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றியதை வாசிம் அக்ரம் மறந்து விடக்கூடாது என்று தெரிவிக்கும் சல்மான் பட் ஒருநாள் கிரிக்கெட்டை மையப்படுத்தி லீக் தொடர்கள் இல்லாத காரணத்தால் அதில் இன்னமும் சுவாரசியமும் புதுமையும் தனித்துவமும் இருப்பதாக கூறுகிறார். எனவே ஒருசில வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள் என்பதற்காக ஒருநாள் கிரிக்கெட்டை மொத்தமாக நிறுத்தக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement