2023 உலகக்கோப்பையுடன் பாண்டியா ரிட்டையர் ஆகிடுவாரு. பின்னணியை பகிரும் முன்னாள் கோச் – ரசிகர்கள் அதிர்ச்சி

Hardik-Pandya
- Advertisement -

கிரிக்கெட்டில் எப்போதுமே ஆல்-ரவுண்டர்களுக்கு பஞ்சம் இருந்துகொண்டே இருக்கும். ஏனெனில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என 3 வகையான துறைகளிலும் தொடர்ச்சியாக அசத்தக்கூடிய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் எப்போதாவதுதான் அரிதாக கிடைப்பார்கள். அதிலும் இந்திய கிரிக்கெட்டில் முதலும் கடைசியுமாக ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் அவரில் பாதியளவு போன்றவர் கூட கிடைக்காமல் தவித்து வந்த இந்தியாவுக்கு கடந்த 2016இல் அறிமுகமான ஹர்திக் பாண்டியா தனது மிகச்சிறந்த செயல்பாடுகளால் அடுத்த சில வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு ஒருவழியாக நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

Kapil

- Advertisement -

ஆனால் 2019 உலகக் கோப்பைக்குப்பின் ஏற்பட்ட காயத்தால் பந்து வீச முடியாமல் அவதிப்பட்ட அவர் 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்டார். அதே காரணத்தால் தன்னை வளர்த்த மும்பை நிர்வாகமும் கழற்றி விட்டது. இருப்பினும் அதற்காக மனம் தளராமல் கடுமையான பயிற்சிகளை எடுத்த அவரை 2022 ஐபிஎல் தொடரில் 15 கோடி என்ற பெரிய தொகைக்கு நம்பி வாங்கிய குஜராத் நிர்வாகம் கேப்டன் பதவியையும் கொடுத்தது.

பாண்டியாவின் கம்பேக்:
அந்த பொறுப்பை சிரமேற்கொண்டு 487 ரன்கள் 8 விக்கெட்களை எடுத்து மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக அசத்திய அவர் அனுபவமில்லாத கேப்டன்சிப் பதவியிலும் அனைத்து வீரர்களும் சிறப்பாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தன்னை நிரூபித்துக் காட்டினார். அதனால் மீண்டும் இந்திய அணிக்குக் கம்பேக் கொடுத்த அவர் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அசத்தி அயர்லாந்து டி20 தொடரில் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பின் நடந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலும் டி20 மற்றும் ஒருநாள் தொடரின் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் துருப்பு சீட்டாகவும் செயல்பட்டார்.

Hardik Pandya

அதனால் அதே பழைய பாண்டியா மீண்டும் கிடைத்துவிட்டார் என்று இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இன்னும் லேசான காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தேவையான நேரங்களில் மட்டுமே பந்து வீசுவதால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலைமையில் தனது பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக வரும் 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஹர்திக் பாண்டியா ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

ரிட்டயர் ஆகிடுவாரு:
சமீபத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 31வயதிலேயே ஓய்வு பெற்றது போல அவரும் ஓய்வு முடிவை எடுப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தற்சமயம் ஒருநாள் போட்டிகள் பின்னடைவை சந்தித்தாலும் உலகக்கோப்பை இருப்பதால் அது நீடிக்கும். ஐசிசியை பொருத்தவரை 20 ஓவர் அல்லது 50 ஓவர் உலக கோப்பைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், அதுதான் நிறைய வருமானத்தையும் கொடுக்கும். டெஸ்ட் கிரிக்கெட் வழக்கம்போல எப்போதும் நீடித்திருக்கும் ஏனென்றால் அதுதான் முக்கியமான போட்டியாகும். இருப்பினும் பணிச்சுமையால் பெரும்பாலான வீரர்கள் தங்களுக்கு பிடித்த போட்டிகளை தேர்வு செய்யத் தொடங்கிவிட்டார்கள்”

Shastri

“ஹர்திக் பாண்டியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாட விரும்புகிறார். மற்ற போட்டிகளில் விளையாட வேண்டாம் என்ற தெளிவுடன் இருக்கிறார். அடுத்த வருடம் இந்தியாவில் உலக கோப்பை நடைபெறுவதால் தற்சமயம் அவர் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவார். அதன்பின் அதிலிருந்தும் அவர் விலகுவதை நீங்கள் பார்க்க போகிறீர்கள்.

- Advertisement -

இந்த முடிவை இதர வீரர்களிடமும் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். விரைவில் அனைத்து வீரர்களும் தங்களுக்குப் பிடித்த ஏதோ ஒரு போட்டிகளை மட்டும் தேர்வு செய்யப் போகிறார்கள்” என்று கூறினார். மேலும் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் தொடர்களை உலகம் முழுவதிலும் இருக்கும் சர்வதேச போட்டிகளை நடத்தும் கிரிக்கெட் வாரியங்கள் நடத்துவதால் அதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவிக்கும் ரவி சாஸ்திரி அதனால் வீரர்கள் தங்களுக்கு பிடித்த போட்டிகளை மட்டும் தேர்வு செய்து வருங்காலங்களில் விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார்.

Pandya

மேலும் இதை தடுக்க இருதரப்பு தொடர்களை நிறுத்திவிட்டு சர்வதேச போட்டிகளை உலக கோப்பையாக மட்டும் நடத்த வேண்டும் என்றும் கூறும் அவர் இதுதான் வருங்காலத்தில் நடக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க : ப்ளீஸ் இவருக்கு வாய்ப்பு கொடுங்க. பிரசித் கிருஷ்ணா வேணாம் – ரசிகர்கள் மத்தியில் இளம்வீரருக்கு குவியும் ஆதரவு

எது எப்படி இருந்தாலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு கபில் தேவ் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா அடுத்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறப்போகிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இது நடப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணிக்க தொடங்கியுள்ளார்.

Advertisement