இன்னும் இந்திய அணி 2023 மூட்லயே இருக்காங்க.. விராட் கோலி சீக்கிரம் வரணும்.. முகமது கைப் கவலை

Mohammed Kaif
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக் ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்தை விட இந்தியா 190 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

அதனால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 2வது இன்னிங்ஸில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பரிதாப தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ராகுல், ஜடேஜா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் சொந்த மண்ணில் வெறும் 202 ரன்களுக்கு சுருண்டு இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

2023 மாதிரியான ஆட்டம்:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது 2023 உலகக் கோப்பை போல விளையாட முயற்சிப்பதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கவலை தெரிவித்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணம் என்று கைஃப் கூறியுள்ளார்.

போதாக்குறைக்கு ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளது பின்னடைவை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் அவர் சூழ்நிலையை உணர்ந்து விளையாடக்கூடிய விராட் கோலி விரைவில் அணிக்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் இந்திய ஒருநாள் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதாக நான் உணர்கிறேன். அதற்கு எடுத்துக்காட்டாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா அல்லது கில் ஆகிய எந்த பேட்ஸ்மேனை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்”

- Advertisement -

“கில் ஷாட்களை அடிக்க விரும்புகிறார். ஆனால் தன்னுடைய தடுப்பாட்டத்தில் அவரிடம் தன்னம்பிக்கை இல்லை. எனவே அவர் தடுப்பாட்டத்திற்கு தேவையான டெக்னிக்கில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயரும் ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரராக உள்ளார். இந்த நேரத்தில் விராட் கோலி இந்திய அணியில் இணைவதற்கு தாமதமாகாது என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: ரோஹித் இருந்தும்.. கிங் கோலி இல்லாததால் அனுபவத்தில் திணறும் இந்தியா.. ஆச்சர்யமான புள்ளிவிவரம்

“துருவ் ஜுரேல், சர்பராஸ் கான் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ஆனால் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாதது இந்திய பேட்டிங் வரிசையை பலவீனமாக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால் அக்சர் பட்டேல் 8வது இடத்தில் விளையாட வேண்டும். அதே காரணத்தால் 9வது இடத்தில் ரன்கள் குவிப்பதற்கு ஒருவர் தேவை என்பதாலேயே இந்திய அ

Advertisement