- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்றைய போட்டியிலும் நியூசி 200 ரன்களுக்கு மேல் குவிக்கும். அதன் காரணம் இதுதான் – விவரம் இதோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் பட்சத்தில் இந்தப் போட்டியிலும் அவர்கள் நிச்சயம் 200 ரன்களுக்கு மேல் குவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதன் காரணம் யாதெனில் ஆக்லாந்து மைதானம் சிறிய மைதானம் என்பதாலும் அவர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட மைதானம் என்பதாலும் அங்கு குறைந்தபட்ச ரன்குவிப்பாக 185 ரன்கள் சராசரியாக இருக்கின்றது.

- Advertisement -

எனவே இன்றைய போட்டியிலும் நிச்சயம் நியூசிலாந்து அணி 200 ரன்களை அசால்டாக குவிக்கும் அதேபோன்று இந்திய அணி அதனை சேசிங் செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்திய அணியில் அதிரடி வீரர்களான ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்து வருகின்றார். அதுமட்டுமின்றி கோலி, ஐயர் மற்றும் பாண்டே என ஓரளவு பலமாகவே இருப்பதால் இந்திய அணியால் எளிதில் சேசிங் செய்ய முடியும்.

எனவே நியூசிலாந்து அணி இன்று 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும் அதற்கு இந்திய அணி பந்து வீச்சாளர்கள் மீது பழிசுமத்த காரணமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதுபோன்ற மைதானங்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விடயம் கிடையாது எது எவ்வாறு இருந்தாலும் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -
Published by