NZ vs NED : இது என்னுடைய பெஸ்ட்டே கிடையாது.. ஆனாலும்.. – ஆட்டநாயகன் மிட்சல் சான்ட்னர் பேட்டி

Santner
- Advertisement -

நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற்ற 2023-ஆம் ஆண்டு 50-வது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 6-ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தலான துவக்கத்தை இந்த உலகக் கோப்பை பயணத்தில் கண்டுள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக வீரர்கள் டாப் 5 வீரர்களும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அவ்வேளையில் பின் வரிசையில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மிட்சல் சான்ட்னர் 17 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 36 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார்.

அதேபோன்று 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை குவித்த வேளையில் நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக மிட்சல் சான்ட்னர் 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்திய அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சான்ட்னர் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே நல்ல அடித்தளத்தை அமைத்ததால் பின் வரிசையில் எங்களால் சிறப்பாக விளையாட முடிந்தது. அதன் காரணமாக அணியின் எண்ணிக்கையும் 320 ரன்களை கடந்தது. அதோடு விளக்கு ஒளியின் கீழ் பந்துவீசும் போது நன்றாக ஸ்கிட் ஆகி சென்றது. இதன் காரணமாக விக்கெட்டுகளும் கிடைத்தன.

இதையும் படிங்க : NZ vs NED : கூடிய சீக்கிரம் எங்களோட ஃபுல் ஸ்ட்ரெத்தை பாப்பீங்க. வெற்றிக்கு பின்னர் – டாம் லேதம் பேட்டி

இந்த போட்டியில் நான் என்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றாலும் என்னுடைய செயல்பாடுகளுக்கு ஏற்ற பரிசு கிடைத்ததாகவே நினைக்கிறேன். இந்த போட்டியில் மைதானம் உதவியதால் என்னால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. எங்களது அணி இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என மிட்சல் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement