
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தொடரை வென்றது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹமில்டன் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 347 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 63, வில் எங் 42, கேன் வில்லியம்சன் 44, கடைசி நேரத்தில் அசத்திய மிட்சேல் சான்ட்னர் 76 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக மேத்தியூ போட்ஸ் 4, கஸ் அட்கின்ஷன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து பஸ்பால் அணுகு முறையை பின்பற்றி அதிரடியாக விளையாட முயற்சித்தது. ஆனால் மறுபுறம் அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்து பவுலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ரன்கள் குவிக்க விடாமல் செய்தனர். அந்த வகையில் சிறப்பாக பவுலிங் செய்த நியூசிலாந்து வெறும் 143 ரன்களுக்கு இங்கிலாந்தை அவுட்டாக்கி தெறிக்க விட்டது.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் 32, கேப்டன் பேன் ஸ்டோக்ஸ் 27 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்துக்கு மாட் ஹென்றி 4, வில்லியம்யம் ஓ’ரோர்கே 3, மிட்சேல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு கேப்டன் டாம் லாதம் 19 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் வில் எங் 60 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய கேன் வில்லியம்சன் அரை சதமடித்து 50* ரன்கள் குவித்தார். அப்போது நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் முடிவில் 136-3 ரன்கள் குவித்துள்ள நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை பெற்று இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. களத்தில் வில்லியம்சனுடன் ரச்சின் ரவீந்திரா 2* ரன்களுடன் உள்ளார்.
இதையும் படிங்க: இதுக்கு அவங்க இங்கயே இருந்திருக்கலாம்.. பாதி தொடரில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட 3 இந்திய வீரர்கள் – காரணம் என்ன?
அந்த வகையில் இப்போட்டியில் வென்று குறைந்தபட்சம் நியூஸிலாந்து ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக் இப்போட்டியில் அடித்த 32 ரன்களையும் சேர்த்து ஜோ ரூட் நியூசிலாந்து மண்ணில் மொத்தம் 952* ரன்கள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற ஜாவேத் மியான்தத் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஜோ ரூட் (இங்கிலாந்து): 752*
2. ஜாவேத் மியான்தத் (பாகிஸ்தான்): 928
3. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா): 842