ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது முதல் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிய 3 வீரர்கள் :
அதன் காரணமாக அவருக்கு பதிலாக பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்தது. அதன் பின்னர் மீண்டும் ரோகித் சர்மா முதன்மை அணியில் இணைந்து தற்போது கேப்டனாக விளையாடி வருகிறார்.
இந்த ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது 18 பேர் கொண்ட முதன்மை அறிவிக்கப்பட்டு கூடுதலாக மூன்று ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர்களாக நவ்தீப் சைனி, யாஷ் தயாள் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணித்திருந்தனர்.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரானது சமநிலையில் இருக்கும் வேளையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி நேற்று பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் ரிசர்வ் வீரர்களாக இடம்பிடித்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரானது விரைவில் துவங்கவுள்ளது.
இதையும் படிங்க : மழையால் பாதிக்கப்பட்ட முதல்நாள் ஆட்டம்.. ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை – விவரம் இதோ
அதில் பங்கேற்க வேண்டிய முகேஷ் குமார், யாஷ் தயாள் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேவை இனி ஆஸ்திரேலிய தொடரில் இருக்காது என்பதன் காரணமாகவே பி.சி.சி.ஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.



