- Advertisement -
உலக கிரிக்கெட்

நியூஸிலாந்து 315 ரன்ஸ்.. வினோதமாக அவுட்டான வில்லியம்சன்.. ஜேக் காலிஸை முந்தி கெய்லை சமன் செய்த சௌதீ

நியூசிலாந்து மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளை வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த நிலையில் 3வது மற்றும் கடைசிப் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹமில்டன் நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்த களம் இறங்கிய நியூசிலாந்துக்கு 105 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல துவக்கத்தை வில் எங் 42 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் அரை சதமடித்த மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் டாம் லாதம் 63 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

பரிதாப வில்லியம்சன்:

அடுத்ததாக வந்த ரச்சின் ரவீந்தரா 18 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 44 ரன்களில் மேத்தியூ போட்ஸ் வீசிய பந்தை தடுத்து நிறுத்த முயற்சித்தார். அந்தப் பந்து அவருடைய பேட்டில் பட்டு ஸ்டம்பை நோக்கி சென்றது. அதை ஸ்டம்ப்பில் படாமல் தடுப்பதற்காக வில்லியம்சன் தன்னுடைய காலால் பந்தை நிறுத்தினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக வேறு கோணத்தில் சென்ற பந்து அவருடைய காலில் பட்டு நேராக ஸ்டம்ப்பில் அடித்து அவரை போல்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்தது. அதனால் மிகுந்த ஏமாற்றம் மற்றும் விரக்தியுடன் வெளியேறிய வில்லியம்சனுக்கு பின் மிடில் ஆர்டரில் டேரில் மிட்சேல் 14, டாம் பிளன்டல் 21, கிளன் பிலிப்ஸ் 5, மாட் ஹென்றி 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சௌதீ அசத்தல்:

இருப்பினும் மிட்சேல் சான்ட்னர் நிதானமாக விளையாடினார். எதிர்புறம் தம்முடைய கடைசிப் போட்டியில் ரசிகர்கள் மற்றும் இங்கிலாந்து வீரர்களின் பாராட்டுக்கு மத்தியில் களமிறங்கிய டிம் சவுதி அதிரடியாக ஒரு பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 23 (10) ரன்களில் அவுட்டானார். அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் 315-9 ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்துக்கு களத்தில் மிட்சேல் சான்ட்னர் 50*, வில்லியம் ஓ’ரோர்கே 0* ரன்களுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: 28/2 டூ 210/3.. இளம் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. ஹென்றிக்ஸ் அபார சாதனை.. பாகிஸ்தானின் 200 சாதனையை உடைத்த தெ.ஆ

இங்கிலாந்துக்கு இதுவரை அதிகபட்சமாக மேத்யூ போட்ஸ் 3, கஸ் அட்கின்ஷன் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். இந்த 3 சிக்ஸர்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை டிம் சௌதீ சமன் செய்தார். இதே போட்டியில் தன்னுடைய கடைசி இன்னிங்ஸில் அவர் 100 சிக்ஸர்களை தொட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். அந்த பட்டியல்:
1. பென் ஸ்டோக்ஸ்: 133
2. ப்ரெண்டன் மெக்கல்லம்: 107
3. ஆடம் கில்கிறிஸ்ட்: 100
4. கிறிஸ் கெயில்/டிம் சௌதீ: தலா 98
5. ஜேக் காலிஸ்: 97

- Advertisement -