150இல் டக்.. ஜோ ரூட் அரிதான மோசமான சாதனை.. ஹரி ப்ரூக் சதத்தால் நியூஸிலாந்தை அடிக்கும் இங்கிலாந்து

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் போராடி 348 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் 93, கிளன் பிலிப்ஸ் 58*, கேப்டன் டாம் லாதம் 47 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக சோயப் பசீர் 4, பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

ஜோ ரூட் பரிதாபம்:

அடுத்ததாக களம் இறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 0, ஜேக்கப் பேத்தல் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அவர்களைத் தொடர்ந்து தன்னுடைய 150வது சாதனை டெஸ்ட் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் விளையாட வந்தார். ஆனால் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் நாதன் ஸ்மித் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 150வது போட்டியில் டக் அவுட்டான முதல் இங்கிலாந்து வீரர் என்ற பரிதாப சாதனையை அவர் படைத்தார். அத்துடன் ஸ்டீவ் வாக் (பாகிஸ்தானுக்கு எதிராக, 2002) மற்றும் ரிக்கி பாண்டிங் (இங்கிலாந்துக்கு எதிராக, 2010) ஆகியோருக்கு பின் தனது 150வது போட்டியில் டக் அவுட்டான 3வது வீரர் என்ற பரிதாப சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

ஹரி ப்ரூக் அசத்தல்:

அது போக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் அதிக (8) முறை என்ற மோசமான உலக சாதனையும் படைத்தார். 2வது இடத்தில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் (தலா 7) உள்ளார்கள். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் நிதானமாக விளையாடிய பென் டக்கெட் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் மிடில் ஆடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் ஹரி ப்ரூக் சதமடித்தார்.

இதையும் படிங்க: 2வது டெஸ்டில் ரோஹித் வந்தா.. ராகுல், சுந்தர் இந்த இடத்தில் விளையாடனும்.. புஜாரா அட்வைஸ்

அவருடன் சேர்ந்து விளையாடிய ஓலி போப் 77 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து 319-5 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை விட 29 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது. களத்தில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 37*, ஹரி ப்ரூக் சதத்துடன் 132* ரன்கள் குவித்து விளையாடி வருகிறார்கள். நியூசிலாந்துக்கு இதுவரை நாதன் ஸ்மித் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Advertisement