2வது டெஸ்டில் ரோஹித் வந்தா.. ராகுல், சுந்தர் இந்த இடத்தில் விளையாடனும்.. புஜாரா அட்வைஸ்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து அடிலெய்ட் நகரில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

முன்னதாக முதல் போட்டியில் ரோஹித் சர்மா தம்முடைய சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. இருப்பினும் பும்ரா தலைமையில் அபாரமாக விளையாடிய இந்திய அணி மிகப்பெரிய வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்தது. ஆனால் தற்போது ரோகித் சர்மா இந்திய அணியில் இணைந்துள்ளதால் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரோஹித் வந்தால்:

அதே போல முதல் போட்டியில் காயத்தால் விளையாடாத சுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு உருவாகி வருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா வந்தாலும் ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று புஜாரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சில காரணங்களுக்காக ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை நாம் துவக்க வீரர்களாகவே தொடரலாம்”

“ரோஹித் சர்மா வந்தால் மூன்றாவது இடத்தில் விளையாடலாம். சுப்மன் கில் 5வது இடத்தில் விளையாடுவது சரியாக இருக்கும். ஒருவேளை ரோகித் துவக்க வீரராக விளையாட விரும்பினால் ராகுல் 3வது இடத்தில் விளையாட வேண்டும். அதை தாண்டி அவர் பேட்டிங் செய்யக்கூடாது. ஏனெனில் டாப் ஆர்டரில் விளையாடுவது அவருடைய ஆட்டத்திற்கு பொருத்தமாக இருக்கிறது”

- Advertisement -

புஜாரா அட்வைஸ்:

“அதே போல சுப்மன் கில் 5வது இடத்தில் விளையாடுவதற்கு சரியாக இருப்பார். ஏனெனில் ஆரம்பத்திலேயே நாம் சில விக்கெட்டுகளை இழக்கும் போது அவரால் புதிய பந்தை எதிர்கொண்டு விளையாட முடியும். அதே சமயம் 25 அல்லது 30 ஓவர்கள் முடிந்த பின் வந்தாலும் அவர் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யக்கூடிய திறமை கொண்டவர்”

இதையும் படிங்க: 10 யார்ட்ஸ் தான்.. நல்லவேளை பும்ராவை என்னோட கேரியரில் நான் எதிர்கொள்ளல.. மைக்கேல் ஆதர்டன் பாராட்டு

“அது லோயர் ஆர்டரில் ரன்கள் குவிக்க உதவக்கூடும். பந்து வீச்சில் மெதுவாக துவங்கினாலும் போட்டி முடிவதற்குள் முன்னேறி அவர் சில முக்கிய விக்கெட்டுகளை எடுப்பார்” என்று கூறினார். அந்த வகையில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு பதிலாக வாசிங்டன் சுந்தர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் புஜாரா தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement