10 யார்ட்ஸ் தான்.. நல்லவேளை பும்ராவை என்னோட கேரியரில் நான் எதிர்கொள்ளல.. மைக்கேல் ஆதர்டன் பாராட்டு

- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தன்னுடைய தனித்துவமான ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் இந்தியாவின் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக முதல் போட்டியில் 150க்கு ஆல் அவுட்டான இந்திய அணி தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்ட முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அசத்தும் பும்ரா:

அப்படியே ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100*, ராகுல் 77 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் வெறும் 10 யார்ட் குறைவான தூரத்திலிருந்து ஓடி வரும் ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் துல்லியமாக பந்து வீசுவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கூறியுள்ளார்.

அதனால் பும்ராவை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். அதே காரணத்தால் நல்லவேளையாக தம்முடைய கேரியரில் பும்ராவை எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் வியப்புடன் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் அற்புதமானவர் என்று நினைக்கிறேன். புதிய பந்தில் வீசிய அவருடைய 2 ஸ்பெல் மந்திரம் போல இருந்தது”

- Advertisement -

ஆதர்டன் பாராட்டு:

“சில பவுலர்கள் ஓய்வு பெறும் போது ஒரு வீரராக உங்களைப் பற்றி நீங்கள் சிந்திப்பீர்கள். அந்த வகையில் நல்ல வேளையாக அவரை நான் புதிய பந்தில் எதிர்கொள்ளவில்லை. ஏனெனில் அவரை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? அவர் ஒரு கனவு போன்றவர் இல்லையா? சுமார் 10 யார்ட் தூரத்திலிருந்து வரும் அவர் இடியைப் போன்ற தன்னுடைய பந்துகளை கட்டவிழ்த்து விடுகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஒதுக்குறேன்.. இப்போல்லாம் இந்தியாவுக்கு வெளிநாடு தான் சொந்த மண்.. காரணம் இது தான்.. பாண்டிங் பாராட்டு

அந்த வகையில் அபாரமாக செயல்படும் ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது ஐசிசி டாப் 10 டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனைகளை படைத்துள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வெற்றி பெற தயாராகி வருகிறது.

Advertisement