உலகக்கோப்பை முடிந்த கையோடு பிளைட்டை பிடித்து இந்தியா வரவுள்ள நியூசிலாந்து – ரொம்ப பாவம் அவங்க

Williamson-2
- Advertisement -

கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய டி20 உலகக்கோப்பை தொடரானது நேற்றோடு முடிவுக்கு வந்தது. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 172 ரன்களை குவித்ததால் நிச்சயம் நியூசிலாந்து வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர்களின் தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

nzvsaus

- Advertisement -

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை அதிர்ஷ்டவசமின்றி நூலிழையில் கைவிட்ட நியூசிலாந்து அணியானது இம்முறை நிச்சயம் டி20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதி நேரத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் நியூசிலாந்து ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த விஷயம் ஏமாற்றத்தை அளித்தது.

அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக 4 முறை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் தவற விட்டுள்ளது. ஏற்கனவே தற்போது இந்த போட்டியில் தோல்வியடைந்து வருஷத்தில் உள்ள நியூசிலாந்து வீரர்கள் அந்த சுவடு மறைவதற்குள் தற்போது இந்தியா பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

NZ

ஏனெனில் 14ஆம் தேதி இறுதி போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணி நாளை மறுதினம் 17ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 தொடரில் பங்கேற்றாக வேண்டும். அதன் காரணமாக இறுதிப்போட்டி முடிந்த கையோடு தற்போது நியூசிலாந்து வீரர்கள் இந்தியா பயணிக்கவுள்ளனர். ஏற்கனவே தோல்வியால் துவண்டு கிடக்கும் நியூசிலாந்து அணி இந்திய அணியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது சற்று கவலையாகத்தான் உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : இதெல்லாம் ஒரு கொண்டாட்டமா? உற்சாக பானத்தை ஷூவில் ஊற்றி குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்

ஏனெனில் மனதளவில் வீரர்கள் இப்போது சோர்ந்து இருப்பார்கள். இந்நிலையில் அந்த அணியை அப்படியே இந்தியாவுக்கு விளையாட நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுப்பி உள்ளது. எது எப்படி இருந்தாலும் கேன் வில்லியம்சன் தனது பணியை மிகவும் சிறப்பாகச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்

Advertisement