INDvsNZ : முக்கியமான இந்த போட்டியில் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் விலக வாய்ப்பு – அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

NZvsIND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு டி20 உலக கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர்12 – ஆட்டங்களில் குரூப்-2ல் இடம்பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் தற்போது பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பிரகாச படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

INDvsPAK

- Advertisement -

இந்த குரூப்பில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இருப்பதனால் இந்தியா பாகிஸ்தான் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை ஏற்கனவே வீழ்த்தி விட்டதால் அவர்கள் எளிதாக அரையிறுதிக்கு நுழைந்து விடுவார்கள் அதே வேளையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.

குறிப்பாக வரவிருக்கும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசம் ஆகும். ஏனெனில் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் சிறிய அணிகளை எதிர்கொள்ள உள்ளதால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதியாக பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

Williamson

இதன் காரணமாக தற்போது இந்த இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் விளையாட மாட்டார் என்றும் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை பெர்குசன் அணியில் இருந்து வெளியேறி உள்ளதால் அவர் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது. இது நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பிட்னெஸ் டெஸ்ட் எல்லாம் ஓகே. இந்திய அணிக்கு தயாரான 6 ஆவது பவுலர் – மகிழ்ச்சியில் இந்திய அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயமடைந்த குப்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போகும் என ஏற்கனவே நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். அதேபோன்று பெர்குசனும் காயம் காரணமாக நாடு திரும்பியதால் தற்போது நியூசிலாந்து அணி சிக்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement