பிட்னெஸ் டெஸ்ட் எல்லாம் ஓகே. இந்திய அணிக்கு தயாரான 6 ஆவது பவுலர் – மகிழ்ச்சியில் இந்திய அணி

ind
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் கோப்பையை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்ட இந்திய அணி சூப்பர் 12-சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 151 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Shaheen-afridi

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியது மட்டுமின்றி பந்து வீச்சிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் சிரமப்பட்டனர். இந்திய அணியில் ஆறாவது பவுலர் ஆப்ஷன் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த உலக கோப்பை தொடரில் பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோள்பட்டையில் அடைந்த காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்சின் போது பந்து வீச வரவில்லை.

மேலும் அவர் பீல்டிங் செய்யவும் வராததால் அவருக்கு பதில் இஷான் கிஷன் பீல்டிங் செய்தார். இந்நிலையில் தற்போது அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் பாண்டியா பந்துவீசாமல் போனால் நிச்சயம் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம் பெற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது இந்திய அணி நடத்திய ஃபிட்னஸ் டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியா தேர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

pandya 1

மேலும் இந்த பயிற்சியில் நிறைய நேரம் பாண்டியா தொடர்ந்து பந்துவீசினார் என்றும் அப்படி பந்துவீசும் போது அவருக்கு எந்த ஒரு அசவுகரியமும் ஏற்படவில்லை என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அவர் 2 ஓவர்களாவது பந்து வீசுவார் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது இந்திய அணியின் ஆறாவது பவுலர் ரெடி என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் ஓவரிலேயே 3 விக்கெட் காலி. வரலாற்று சாதனையை நிகழ்த்திய நமீபியா வீரர் யாருப்பா இவரு ?

அடுத்த போட்டியில் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் தனிப்பட்ட முறையில் ஹார்டிக் பாண்டியா தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அவர் அசத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement