10 வருஷமா நியூஸிலாந்திற்கு தொடரும் சோகம். அதுக்குன்னு இப்படியா ? – பெரிய கோப்பையே இதனாலே போச்சு – தெரியுமா ?

Williamson-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது.

Kohli-1

- Advertisement -

இந்த போட்டியிலும் இரு அணிகளும் 165 ரன்களை குவிக்க போட்டி கடந்த 3 ஆவது போட்டியை போல சூப்பர் ஓவர் வரை சென்றது. இந்த சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 13 ரன்கள் குவிக்க 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல 4-0 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியிலும் கடந்த போட்டியை போல நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்து ஒரு சோகமான நிகழ்வை சந்தித்துள்ளது. அது யாதெனில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை நியூசிலாந்து அணி 8 முறை சூப்பர் ஓவரை எதிர்கொண்டுள்ளது. அதில் 7 முறை தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. ஒரே முறை மட்டும் 2010 ஆம் ஆண்டு வென்றுள்ளது.

Williamson

மற்றபடி அடுத்த 7 போட்டிகளில் தோல்வி தான். அதிலும் முக்கியமாக நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் தவறவிட்ட மிகப்பெரிய கோப்பை யாதெனில் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையின் போது இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து இங்கிலாந்து அணி மோதிய சூப்பர் ஓவரில் பவுண்டரி விதிமுறை மூலம் நியூசிலாந்து அணி தோல்வியுற்றது மிகப்பெரிய இழப்பாக இன்றுவரை பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement