- Advertisement -
உலக கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் முன்னேற்றம் கண்ட நியூசிலாந்து – விவரம் இதோ

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது.

முன்னேற்றம் கண்ட நியூசிலாந்து அணி :

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கி போட்டியின் நான்காம் நாளான இன்றுடன் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக 423 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது. நியூசிலாந்து வீரர்கள் இந்த தொடரில் கடைசி போட்டியில் விளையாடிய விதம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை தவறவிட்டிருந்தாலும் அவர்கள் பெற்ற இந்த ஒரு வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியல் முன்னேற்றத்தையும் கண்டுள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முறையே தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் தொடர்கின்றன. அதற்கு அடுத்து ஆறாவது இடத்தில் இருந்த நியூசிலாந்து தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணியின் நட்சத்திர வீரரான அவரை நான் நேர்ல பாக்கனும்.. அதுதான் என் ஆசை – சிம்ரன் ஷையிக்

மேலும் இந்த புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இலங்கை அணியும், ஆறாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் இருக்கின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப்போட்டியானது நெருங்கி வரும் வேளையில் முதல் இரண்டு இடங்களை பிடித்து எந்த இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -