பயோ பபுள் விதிமுறையை மீறிய 6 நியூசிலாந்து வீரர்கள். கம்ப்ளைன்ட் செய்த இந்திய நிர்வாகம் – நடந்தது என்ன ?

INDvsNZ
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கு பெற இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணியின் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும், இந்த இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் மைதனாத்தினுள்ளாகவே அமைந்திருக்கும் ஹில்டன் ஹோட்டலில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் செய்த ஒரு செயலைக் கண்ட இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் ஐசிசியிடம் இதைப் பற்றி முறையிட்டிருக்கிறார்.

ind

- Advertisement -

இந்திய வீரர்கள் அனைவரும் கடந்த மூன்றாம் தேதியில் இருந்தே ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருக்க, நியூசிலாந்து அணியின் வீரர்கள் அனைவரும், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முடித்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் இந்த ஹோட்டலுக்கு வந்துள்ளனர். நேற்று அந்த அணியின் வீரர்களான டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் மற்றும் அந்த அணியின் பிசியோவான டாமி சிம்செக் உள்ளிட்ட ஆறு நபர்கள் ஹோட்டலுக்கு அருகிலுள்ள கோல்ஃப் மைதானத்திற்கு சென்று கோல்ஃப் விளையாடியதாக தெரிய வந்திருக்கிறது.

இதனால் பயோ பபுள் விதிமுறையைக் காரணம் காட்டி இந்த விவகாரத்தை பற்றி ஐசிசியிடம் முறையிட்டிருக்கிறார் இந்திய அணியின் மேலாளர். இந்த முறையீட்டுக்கு பதிலளித்த ஐசிசி, தனிமைப் படுத்துதல் தடைக்காலம் முடிந்த பின்னர் வீரர்கள் அனைவரும் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறியிருக்கிறது. மேலும் இந்த விதிமுறையானது இந்திய அணி வீரர்களுக்கும் பொருந்தும் எனவும் பதில் அளித்துள்ளது ஐசிசி.

ந்திய அணிக்கு முன்பாகவே இங்கிலாந்திற்கு சென்ற நியூசிலாந்து அணி வீரர்கள் அனைவரும் தனிமை முகாமில் இருந்துவிட்டுதான் அடுத்ததாக நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்றார்கள். எனவே அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல ஏற்கனவே அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

INDvsNZ

இந்திய அணி வீரர்களும் இந்த இறுதிப் போட்டி முடிந்த பின்னர் நடக்க இருக்கும், இங்கிலந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற அனுமதியை ஏற்கனவே ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுதினம் நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரிடையாக ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement