ஐ.சி.சி கிட்ட இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா ? இந்தியா நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் நடந்த அதிசயம் – விவரம் இதோ – INDvsNZ

Ranchi-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்து கொண்டது. இந்நிலையில் இந்த போட்டியில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

- Advertisement -

காயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூசி அணி வீரர்களின் குறைபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நியூசிலாந்து அணியின் ஆடும் 11 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் காயம் அடைந்து விட இன்று குப்திலுக்கு பதிலாக சில ஓவர்கள் அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் லுக் ரோஞ்சி ஆடுகளத்தில் களமிறங்கி பீல்டிங் செய்தார்.

ஏற்கனவே அந்த அணியின் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக அணிக்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் . பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்ம் காயத்தின் காரணமாக வெளியே இருக்கிறார் . இவ்வாறாக அந்த அணியின் வீரர்களான மிட்செல் சண்ட்னர் வயிற்று வலி காரணமாக களம் இறங்கவில்லை. மற்றொருவர் ஸ்காட் குஜ்ஜெலின் அவருக்கு உடல்நிலை சரியில்லை.

ranchi

இதன் காரணமாக வேறு வழியின்றி அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் லுக் ரோஞ்சி சட்டையை மாற்றிக்கொண்டு களமிறங்கி மாற்று வீரராக ஆடி பீல்டிங் செய்தார். நியூசிலாந்து அணி பயிற்சியாளர்களை அனுப்புவது இது புதிதல்ல. ஏற்கனவே கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடந்த போட்டியில் அந்த அணியின் வீரர் ஒருவருக்கு பதிலாக பேட்டிங் பயிற்சியாளர் மாற்று வீரராக வந்து பீல்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement