தூங்கிய வங்கதேசத்தை எழுப்பிட்டாங்க.. யாரும் பெருசில்ல.. 3 வாரத்தில் தனது கருத்தை வாபஸ் பெற்ற ஷாகிப்

Shakib Al Hasan
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை விரைவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோவலாக துவங்கி நடைபெற உள்ளது. அதற்கு தயாராவதற்காக அமெரிக்கா பயணித்துள்ள வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆனால் அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற அமெரிக்கா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே வங்கதேசத்தை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதன் வாயிலாக வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரை வென்று அமெரிக்கா சாதனை படைத்துள்ளது. அத்துடன் ஐசிசி’யின் முழு அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற முதல் உறுப்பு நாட்டு அணியாகவும் அமெரிக்கா சாதனை படைத்தது. மறுபுறம் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் தொடரை இழந்த வங்கதேசம் அவமான சந்தித்தது.

- Advertisement -

தட்டி எழுப்பிட்டாங்க:
முன்னதாக கடந்த மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் விளையாடியது. அப்போது டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக தொடரை நடத்தாமல் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக நடத்துவது ஏமாற்றத்தை கொடுப்பதாக வங்கதேச வாரியம் மீது ஷாகிப் அல் ஹசன் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவிடம் தோல்வியை சந்தித்ததால் டி20 கிரிக்கெட்டில் யாரும் சிறிய அணி கிடையாது என்று அவர் தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

அத்துடன் இந்த தோல்வி தூங்கிக் கொண்டிருந்த வங்கதேசத்தை தட்டி எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் அமெரிக்க அணி விளையாடிய விதத்திற்கு பாராட்டு கொடுக்க வேண்டும். நாங்கள் 2 போட்டிகளில் தோற்போம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்”

- Advertisement -

“அணியாக நீங்கள் தோற்கும் போது ஏமாற்றம் கிடைக்கும். நீங்கள் தோற்க விரும்ப மாட்டீர்கள் என்பதால் இது ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஆனால் நாங்கள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். நாங்கள் விரும்பியபடி விளையாடாததால் இந்த தொடர் எங்களை தட்டி எழுப்புவதற்கான எச்சரிக்கை மணியாகும். இது அணி விளையாட்டு என்பதால் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது”

இதையும் படிங்க: ஆர்சிபி ரசிகர்களுக்காக வருத்தப்படுறேன்.. அதை செஞ்சுருந்த இந்நேரம் 2 கோப்பை ஜெயிச்சுருக்கலாம்.. ராயுடு சோகமான அட்வைஸ்

“நீங்கள் அணியாக வெல்வீர்கள் தோற்பீர்கள். எனவே தோல்விக்காக நான் குறிப்பிட்ட நபரை அல்லது குறிப்பிட்ட துறையை குற்றம் சொல்ல விரும்பவில்லை. டி20 கிரிக்கெட்டில் எதிரணி எதுவாக இருந்தாலும் நீங்கள் அனைத்து 3 துறைகளிலும் நன்றாக விளையாட வேண்டும். இங்கே பெரிய அல்லது சிறிய அணி என்ற பாகுபாடு கிடையாது. அதனாலேயே இது சுவாரசியமான ஃபார்மட்டாக இருக்கிறது. அதற்கு கடந்த 2 போட்டிகளில் அமெரிக்கா விளையாடியது எடுத்துக்காட்டு” என்று கூறினார்.

Advertisement