இலங்கையை வீழ்த்திய நியூஸிலாந்து.. பாகிஸ்தான் ஃசெமி பைனல் செல்ல தேவையான பரிதாப ரன்கள் என்ன

NZ vs SL
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 9ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற 41வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் ஏற்கனவே வெளியேறிய இலங்கையை தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய நியூஸிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு நிசாங்கா 2, கேப்டன் குசால் மெண்டிஸ் 6, சமரவிக்ரமா 1, அசலங்கா 8 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய குசால் பெரேராவும் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 51 (28) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பாகிஸ்தானின் வாய்ப்பு:
அவர்களைத் தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் 16, டீ சில்வா 19 ரன்களில் அவுட்டானதால் 128/9 என சரிந்த இலங்கை 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கடைசி விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடிய தீக்சனா 38* ரன்களும் மதுசங்கா 19 ரணன்களும் எடுத்த போதிலும் 46.4 ஓவரில் இலங்கையை 171 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3, லாக்கி பெர்குசன் 2, மிட்சேல் சாட்னர் 2, ரச்சின் ரவீந்திரா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 172 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 86 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த டேவோன் கான்வே 45 (42) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அசத்திய ரச்சின் ரவீந்திரா அதிரடியாக 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 14 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த மார்க் சேப்மேன் 7 ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் டார்ல் மிட்சேல் அதிரடியாக விளையாடிய டார்ல் மிட்சேலும் 43 (31) ரன்களில் அவுட்டானார். ஆனாலும் இலக்கு குறைவாக இருந்ததால் அடுத்ததாக வந்த கிளன் பிலிப்ஸ் 17* ரன்களும் டாம் லாதம் 2* ரன்கள் எடுத்ததால் 23.3 ஓவரிலேயே 172/5 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: நியூஸிலாந்தின் புதிய நாயகனாக.. சச்சின், பேர்ஸ்டோவின் சாதனைகளை உடைத்த ரச்சின்.. 2 புதிய உலக சாதனை

அதை விட இந்த வெற்றியால் 10 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை 99.9% உறுதி செய்து விட்டது. ஏனெனில் நியூசிலாந்தின் வெற்றியால் 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் தங்களுடைய கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 287 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் பெற்றால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற அசாத்தியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Advertisement