PAK vs NZ : 345 ரன்கள் 43 ஓவர்கள்.. ரிஸ்வான், பாபரை விட மிரட்டிய இந்திய வம்சாவளி வீரர்.. பாக் பவுலர்களை நொறுக்கிய நியூஸிலாந்து

Rachin Ravindra PAK vs NZ
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. அதற்கு அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போட்டியில் செப்டம்பர் 29ஆம் தேதி துவங்கின. அதில் ஹைதராபாத் நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 3வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அப்போட்டியில் நியூஸிலாந்து நட்சத்திரம் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கியதும் ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடைய கேரியரிலேயே முதல் முறையாக இந்திய மண்ணில் விளையாடியதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 345/5 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

நியூஸிலாந்து வெற்றி:
அந்த அணிக்கு அப்துல்லா ஷபிக் 14, இமாம்-உல்-ஹக் 1 என துவக்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட கேப்டன் பாபர் அசாம் 80 (84) ரன்கள் எடுத்தார். அவருடன் மறுபுறம் அசத்திய மற்றொரு நட்சத்திரம் முகமது ரிஸ்வான் சதமடித்து 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 103 (94) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

அவர்களைத் தொடர்ந்து சௌத் ஷாகீல் அதிரடியாக 75* (53) ரன்களும் சல்மான் ஆஹா 33* (23) ரன்களும் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சாட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதை தொடர்ந்து 346 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு நம்பிக்கை நட்சத்திரம் டேவோன் கான்வே கோல்டன் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 54* (50) ரன்கள் குவித்து அடுத்த வீரர்களுக்கு வழி விட்டு பெவிலியன் திரும்பினார். அவருடன் மறுபுறம் அதிரடியாக விளையாடிய இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்தரா அரை சதமடித்த நிலையில் எதிர்ப்புறம் வந்த டார்ல் மிட்சேல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 59* (57) ரன்கள் குவித்து பெவிலியன் சென்றார். அடுத்த சில ஓவர்களிலேயே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 16 பவுண்டரி 1 சிக்ஸருடன் 97 (72) ரன்களில் போல்ட்டாகி ஏமாற்றமடைந்தார்.

ஆனால் அப்போது வந்த கேப்டன் டாம் லாதம் 18, கிளன் பிலிப்ஸ் 3 ரன்களில் அவுட்டானதால் நியூசிலாந்தின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் பவுலர்களைப் பந்தாடிய ஜிம்மி நீசம் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 (21) ரன்கள் அடித்து அவுட்டானார். அவருடன் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத மார்க் சாப்மேன் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 65* (41) ரன்கள் விளாசி சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: SL vs BAN : பயிற்சி போட்டியில் அதிரடி.. 48 பால் மீதம்.. இலங்கையை கேப்டன் ஷாகிப் இல்லாமலேயே வங்கதேசம் தோற்கடித்தது எப்படி?

அதனால் 43.4 ஓவரிலேயே 346/5 ரன்கள் எடுத்த நியூசிலாந்து எளிதாக 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இத்தொடரை வெற்றியுடன் துவங்கியது. மறுபுறம் சிறந்த பவுலிங் கூட்டணியை கொண்டுள்ள அணியாக கருதப்படும் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஒசாமா மிர் 2 விக்கெட்டுகள் எடுத்த போதிலும் ஏனைய வீரர்கள் ரன்களை வாரி வழங்கியதால் இத்தொடரை தோல்வியுடன் துவக்கியுள்ளது.

Advertisement