வீடியோ : வெற்றிக்கு முன்பே கொண்டாடிய பாபர் அசாம், குறுக்கே வந்த சேப்மேன் – பி அணியிடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான்

Pak vs NZ Mark Chapman
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியது. கேன் வில்லியம்சன் காயமடைந்த நிலையில் ட்ரெண்ட் போல்ட், டேவோன் கான்வே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இந்தியாவின் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதால் இத்தொடரில் டாம் லாதம் தலைமையில் இளம் வீரர்களுடன் நியூசிலாந்து களமிறங்கியது. அதனால் அதிருப்தியடைந்த அப்துல் ரசாக் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் ஐபிஎல் தொடருக்காக தங்கள் நாட்டுக்கு 2வது தர அணியை அனுப்பியதாக நியூசிலாந்தை ஆரம்பத்திலேயே விமர்சித்தனர்.

ஆனால் கடந்த வருடம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட வெற்றி காண முடியாத பாகிஸ்தான் கடந்த டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 0 – 0 (2) என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து கொண்டது. அந்த நிலையில் சமீபத்தில் சார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் மீண்டும் பாகிஸ்தான் தோற்றது.

- Advertisement -

அசத்திய சேப்மேன்:
அப்படி சொந்த ஊரிலும் வெளிநாட்டிலும் ஆப்கானிஸ்தான் போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராகவும் வெல்ல முடியாத நீங்கள் முதலில் இந்த இளம் நியூசிலாந்து அணியை வென்று காட்டுங்கள் என்று ஐபிஎல் தொடரை இழுத்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். அந்த நிலைமையில் துவங்கிய இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற பாகிஸ்தானுக்கு 3வது போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து பதிலடி கொடுத்தது.

இருப்பினும் 4வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 24ஆம் தேதியான நேற்றிரவு ராவல்பிண்டியில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 193/5 ரன்கள் குவித்தது. முகமத் ரிஸ்வானுடன் 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடவலாகவே செயல்பட்ட கேப்டன் பாபர் அசாம் 19 (18) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த முகமத் ஹரிஸ் 0, சாய்ம் ஆயுப் 0 அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

இருப்பினும் மிடில் ஆர்டரில் இப்திகார் அகமது அதிரடியாக 36 (22) ரன்களும் இமாத் வசிம் 31 (14) ரன்களும் எடுக்க மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 98* (62) ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் நல்ல பினிஷிங் கொடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக பிளாக் டிக்னர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 194 ரன்களை துரத்திய நியூஸிலாந்துக்கு கேப்டன் டாம் லாதம் 0, பௌஸ் 19 (13), வில் எங் 4 (4), டார்ல் மிட்சேல் 15 (18) என டாப் 4 பேட்ஸ்மேன்கள் ஷாஹீன் அப்ரிடி, இமாத் வாசிம் ஆகியோரின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

அதனால் 73/4 என திணறிய நியூஸிலாந்தின் வெற்றி கேள்விக்குறியான போது ஜோடி சேர்ந்த மார்க் சேப்மேன் – ஜிம்மி நீசம் ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாகவும் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பவுலர்களை புரட்டி எடுத்தனர். 10வது ஓவரில் இணைந்து இவர்களை பிரிக்க பாபர் அசாம் போட்ட அனைத்து திட்டங்களையும் தவிர பொடியாக்கிய இந்த ஜோடி 19.2 ஓவரிலேயே 194/4 ரன்களை எடுக்க வைத்து நியூசிலாந்துக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று கொடுத்தது.

- Advertisement -

அதில் மார்க் சேப்மேன் அபாரமான சதமடித்து 11 பவுண்டரி 4 சிக்சருடன் 104* (57) ரன்களும் ஜிம்மி நீசம் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (25) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அதனால் 2 – 2 (5) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்த 2வது தர நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை வெல்ல முடியாமல் மண்ணை கவ்விய பாகிஸ்தானை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: அவரை மாதிரி ஒரு சோம்பேறியை டெல்லி அணியில் இருந்து நீக்கியது சரிதான் – சைமன் டவுல் விளாசல்

அதை விட இப்போட்டியில் 193 ரன்கள் எடுத்ததால் நிச்சயம் வெற்றி பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாக உலக சாதனை படைக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் பெவிலியனில் பாபர் அசாம் கொண்டாடும் வகையில் நடன அசைவுகளை வெளிப்படுத்தினார். ஆனால் வங்கதேசம் போல வெற்றி பெறுவதற்கு முன்பாகவே கொண்டாடி இறுதியில் பல்பு வாங்கிய அவரையும் சேர்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement