33/5 டூ 223.. தனியாளாக போராடிய கேப்டன் ப்ரூக்.. நியூஸிலாந்து மண்ணில் வரலாறு காணாத சாதனை.. இங்கிலாந்து தோல்வி

Nz vs ENG 2
- Advertisement -

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 (3) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி அக்டோபர் 26ஆம் தேதி மவுண்ட் மௌங்கனி நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக இருக்கிறது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு முதல் பந்திலேயே ஜேமி ஸ்மித் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்த ஓவரில் பென் டக்கெட்டை 2 ரன்னில் காலி செய்த ஜக்காரி போல்க்ஸ் அடுத்ததாக வந்த ஜோ ரூட்டை 2 ரன்னில் போல்ட்டாக்கினார். அப்போது களமிறங்கிய கேப்டன் ஹாரி ப்ரூக் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடினார்.

- Advertisement -

போராடிய ப்ரூக்:

ஆனாலும் எதிர்ப்புறம் ஜேக்கப் பெத்தல் 2, ஜோஸ் பட்லர் 4 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார்கள். அதனால் 33/5 என திணறிய இங்கிலாந்து 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குத் தகுந்தார் போல் அடுத்து வந்த சாம் கரண் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது மறுபுறம் ப்ரூக் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் அரை சதத்தை அடித்தார்.

எதிர்ப்புறம் வந்த ஜேமி ஓவர்டன் 7வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 46 ரன்கள் குவித்துப் போராடி அவுட்டானார். அடுத்து வந்த பிரைடன் கார்ஸ் கோல்டன் டக் அவுட்டான போதிலும் மறுபுறம் நியூசிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட ப்ரூக் 82 பந்துகளில் சதத்தை அடித்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் சதத்தை அடித்த முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற வரலாறு காணாத சாதனையை அவர் படைத்தார்.

- Advertisement -

நியூஸிலாந்து வெற்றி:

இதற்கு முன் அலெஸ்டர் குக், ஜோ ரூட் போன்ற எந்த இங்கிலாந்து கேப்டன்களும் நியூசிலாந்து மண்ணில் சதத்தை அடித்ததில்லை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 9 பவுண்டரி 11 சிக்சரை பறக்க விட்ட ப்ரூக் 135 (101) ரன்கள் விளாசி தனியாளாக போராடி ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்தை 35.2 ஓவரில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஃஜக்காரி போல்க்ஸ் 4, ஜேக்கப் டுபி 3, மாட் ஹென்றி 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய சென்றடைந்த பும்ரா டி20 தொடரிலும் ஒரு கண்டிஷனோடு தான் விளையாடப்போறாராம் – விவரம் இதோ

அடுத்த விளையாடிய நியூசிலாந்து 36.4 ஓவரில் 224/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில் எங் 5, ரச்சின் ரவிந்த்ரா 17 கேன் வில்லியம்சன் 0 ரன்களில் அவுட்டானார்கள். அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 78*, மைக்கேல் பிரேஸ்லெஸ் 51, கேப்டன் சான்ட்னர் 27 டாம் லாதம் 24 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 3 விக்கட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

Advertisement