ஆஸ்திரேலிய சென்றடைந்த பும்ரா டி20 தொடரிலும் ஒரு கண்டிஷனோடு தான் விளையாடப்போறாராம் – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த சில ஆண்டுகளாகவே காயத்தால் அடிக்கடி சிக்கலை சந்திப்பதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு முக்கிய போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதோடு இந்திய அணியின் நிர்வாகமும் அவருக்கு தேவையான நேரத்தில் ஓய்வினை வழங்கி வருகிறது. அதனால் பெரும்பாலும் அவர் தொடர்ச்சியாக விளையாடுவதில்லை.

ஆஸி தொடரிலும் கண்டிஷனுடன் விளையாடும் பும்ரா :

ஏனெனில் மூன்று வகையான இந்திய அணியிலும் முக்கிய வீரராக விளங்கி வரும் அவர் பெரிய காயத்தில் சிக்கினால் அது மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்படுத்தலாம் என்பதனால் அவ்வப்போது அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு முக்கியமான போட்டிகளில் மட்டுமே இந்திய அணி நிர்வாகம் அவரை விளையாட வைத்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறயிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அவர் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலும் பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடாமல் ஒரு முக்கிய கண்டிசனோடு தான் விளையாட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு பின்னர் இந்திய அணிக்கு அடுத்தடுத்த தொடர்கள் இருப்பதினால் இந்த தொடரிலும் மூன்று போட்டிகளில் மட்டுமே அவர் விளையாட இருப்பதாக தெரிகிறது. பணிச்சுமை காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வளிக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 37 வயதானலும் 2 டக் யார்ன்னு காமிச்சுடுச்சு.. ரோஹித்துடன் இதை 2013இல் ஆரம்பிச்சேன்.. விராட் கோலி பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் ஒருநாள் தொடரினை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement