37 வயதானலும் 2 டக் யார்ன்னு காமிச்சுடுச்சு.. ரோஹித்துடன் இதை 2013இல் ஆரம்பிச்சேன்.. விராட் கோலி பேட்டி

Virat Kohli 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆறுதல் வெற்றியுடன் ஒய்ட்வாஷ் தவிர்த்தது. அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 237 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய இந்தியா 38.3 ஓவரில் 237/1 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121* ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் தம்மை கழற்றி விடத் துடிக்கும் தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்து அவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலி 74* ரன்கள் குவித்து போட்டியை ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

2013இல் துவங்கிய பார்ட்னர்ஷிப்:

குறிப்பாக முதல் 2 போட்டிகளில் விராட் கோலி அடுத்தடுத்து டக் அவுட்டாகி விமர்சனங்களைச் சந்தித்தார். அதற்கு பதிலடியாக இப்போட்டியில் 74* ரன்கள் அடித்த அவர் தம்மை சாம்பியன் பிளேயர் என்பதை மீண்டும் நிரூபித்தார். மேலும் அவரும் ரோஹித் சர்மாவும் 169 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தது ரசிகர்களுக்கு பழைய நினைவுகளைக் கொடுத்தது.

இந்நிலையில் முதல் 2 போட்டிகளில் தாம் டக் அவுட்டானது கிரிக்கெட்டில் யாரும் பெரியவர் கிடையாது என்பதைக் காண்பித்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் 2013இல் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து ரோஹித் சர்மாவுடன் தன்னுடைய நட்பு மற்றும் பார்ட்னர்ஷிப் உண்டானதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி விராட் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

விராட் – ரோஹித்:

“நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடியிருக்கலாம். ஆனால் இப்போதும் இந்த விளையாட்டு உங்களுக்கு எதையாவது பல வகைகளில் காட்டும் (டக் அவுட் பற்றி). இன்னும் சில நாட்களில் 37 வயதை தொட உள்ளேன். சேசிங் செய்வது என்னுடைய சிறந்த செயல்பாடுகளைக் கொண்டு வருகிறது. ரோஹித்துடன் வெற்றிக்கான பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்ததில் மகிழ்ச்சி”

இதையும் படிங்க: நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் இந்திய அணியிடம் தோக்க காரணம் – மிட்சல் மார்ஷ் பேட்டி

“நாங்கள் எப்போதும் போல சூழ்நிலைகளை நன்றாக புரிந்து விளையாடினோம் என்று நினைக்கிறேன். தற்போது நாங்கள் அனுபவமிக்க ஜோடியாக உள்ளோம். இளம் வயதில் இருக்கும் போதும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தால் வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவை அனைத்தும் 2013இல் துவங்கியது. 20 ஓவர்கள் விளையாடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தால் எங்கள் அணியை வெற்றி பெற வைக்க முடியும் என்பது தெரியும். ஆஸ்திரேலியாவில் விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு இங்கே பெருமளவு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

Advertisement