மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தங்களது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அந்த அணி ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்திய அணி நம்பர் 1 அணி : மிட்சல் மார்ஷ்
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று சிட்னி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்த தொடரின் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 236 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 38.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 237 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த கடைசி போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் கூறுகையில் : கடந்த 10 ஆண்டுகளாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடி வருவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். பல்வேறு அணிகளும் அவர்களது ஆட்டத்தை பார்த்திருக்கிறது.
இந்த போட்டியில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் இறுதி நேரத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். எங்களது அணி பேட்டிங்கில் சிறப்பாக துவங்கி கடைசி நேரத்தில் அதனை கோட்டை விட்டதால் தான் சறுக்கியது என்று கருதுகிறேன். எங்களது அணியின் இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நிறைய அனுபவத்தை கொடுத்திருக்கும்.
இதையும் படிங்க : இதைத்தான் எதிர்பார்த்தேன்.. ஒரு வழியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றது குறித்து – கேப்டன் கில் பேட்டி
இந்த தொடரில் இருந்து நிறைய கற்றுக் கொண்டோம். இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். இந்திய அணி உலகின் நம்பர் 1 அணி என்பதை இந்த போட்டியில் காண்பித்து விட்டார்கள். முதல் இரண்டு போட்டியிலுமே நாங்கள் வெற்றி பெற்று இந்த தொடரினை கைப்பற்றியதில் மகிழ்ச்சி என மிட்சல் மார்ஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.



