இதைத்தான் எதிர்பார்த்தேன்.. ஒரு வழியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றது குறித்து – கேப்டன் கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக ஏற்கனவே இந்திய அணி இரண்டு தோல்வியை சந்தித்ததால் இந்த தொடரை இழந்துவிட்டது. அதனை தொடர்ந்து இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த தொடரின் இறுதிப் போட்டியானது நடைபெற்றது.

கேப்டனாக முதல் வெற்றியை பெற்றதில் மகிழ்ச்சி : சுப்மன் கில்

அதன்படி நடைபெற்ற இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 38.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 237 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது :

இந்த மூன்றாவது போட்டியில் தான் கிட்டத்தட்ட நாங்கள் சிறப்பான ஆட்டத்தை விளையாடியதாக உணர்கிறேன். இந்த தொடர் முழுவதுமே இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த போட்டியை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பாக ஆரம்பித்திருந்தது. ஆனாலும் மிடில் ஓவர்களின் போது நாங்கள் மிகச் சிறப்பாக அவர்களை கட்டுப்படுத்தி போட்டிக்குள் வந்ததாக நினைக்கிறேன்.

- Advertisement -

இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களும் அற்புதமாக செயல்பட்டு இருந்தனர். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது முக்கியமான ஒன்று. ஹர்ஷித் ராணா இன்றைய போட்டியில் மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பொறுத்தவரை கடந்த பால ஆண்டுகளாகவே அவர்கள் இதையே தான் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சின் கங்குலி ஜோடியின் சாதனையை சமன் செய்த ரோஹித் கோலி ஜோடி – விவரம் இதோ

இந்த போட்டியில் அவர்கள் இருவரும் விளையாடிய விதத்தை பார்ப்பதற்கு உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருந்தது. இருவருமே அற்புதமான இன்னிங்சை விளையாடி இருந்தனர். இந்திய அணியின் கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் முதல் வெற்றியை பெற்றதில் மகிழ்ச்சி என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement