தெ.ஆ தொடர் சும்மா பெயருக்கு தான் ! உலககோப்பைக்கு அணித்தேர்வு எப்படி இருக்கும் தெரியுமா? – கங்குலி ஓப்பன்டாக்

Dravid
Advertisement

இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தலைகுனிவுக்கு உள்ளான இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் அட்டகாசமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தது. அதனால் இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளின் முடிவில் 2 – 2* என சமநிலையில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஜூன் 19இல் நடைபெற உள்ளது. அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு இரு அணிகளும் தீவிரமாகப் போராட உள்ளனர்.

Harshal Patel David Miller IND vs RSA

இந்த இரு அணிகளுக்குமே வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடப் போகும் தரமான வீரர்களை கண்டறியும் ஒரு தொடராகவே இது பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே சமீபத்திய ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்த தொடரில் இரு நாட்டு அணி நிர்வாகங்களும் வாய்ப்பளித்துள்ளன. குறிப்பாக இந்திய அணியில் கேப்டனாகவும் ஆல்-ரவுண்டராகவும் அசத்திய ஹர்திக் பாண்டியா பினிஷராக மிரட்டிய தினேஷ் கார்த்திக் ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பின் சேர்க்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அசத்தும் வீரர்கள்:
அந்த வகையில் இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை தெரிந்துள்ள வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்காக முழுமூச்சுடன் மிகச் சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறார்கள். குறிப்பாக நீண்ட நாட்களுக்குப்பின் கம்பேக் கொடுத்துள்ள ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

Dinesh Karthik and Hardik Pandya

அதேபோல் பந்துவீச்சு துறையில் ஹர்ஷல் படேல், அவேஷ் கான், புவனேஸ்வர் குமார் என சீனியர் – ஜூனியர் பாகுபாடு பார்க்காமல் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பதற்காக அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு அசத்துகின்றனர். 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இந்த தொடரில் பின் தங்கினாலும் அதற்காக அஞ்சாமல் அடுத்த 2 போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு தொடரை சமன்செய்ய உதவிய இந்திய வீரர்கள் இந்தியா வெற்றி பெற்றதுள்ளது என்ற மகிழ்ச்சியுடன் டி20 உலகக் கோப்பையிலும் விளையாடப் போகிறோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

- Advertisement -

ஆனால் இந்த தொடர் வெறும் பெயருக்கு தான் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் தொடரிலிருந்து தான் உலக கோப்பையில் விளையாட போகும் இறுதிக்கட்ட வீரர்களை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேர்வு செய்வார் என்று கூறியுள்ளார்.

Ganguly-2

இங்கிலாந்து தொடர்:
இது பற்றி தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது பின்வருமாறு. “அதை ராகுல் டிராவிட் கவனித்து வருகிறார். ஒரு கட்டத்தில் தரமான வீரர்களை இறுதியாக தேர்வு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். அனேகமாக அடுத்த மாதம் நிகழும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் யாரெல்லாம் விளையாட போகிறார்கள் என்பதை இறுதியாக தேர்வு செய்ய அவர் துவங்கலாம்” என்று மறைமுகமாக தெரிவித்தார். அதாவது சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் எப்படியும் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் முழுமையான தரம் இதில் தெரிய வராது என்று இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது.

- Advertisement -

பொதுவாகவே ஒரு வீரரின் தரத்தை வெளிநாடுகளில் அந்த அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதை வைத்துதான் வல்லுனர்கள் கணக்கிடுவார்கள். மேலும் டி20 உலகக்கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலிய கால சூழ்நிலையும் இங்கிலாந்து சூழ்நிலையும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக காணப்படும். அந்த வகையில் இந்த தென்னாபிரிக்க தொடர் முடிந்ததும் வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுடன் ஏறக்குறைய இப்போதைய அணி மீண்டும் விளையாட உள்ளது.

இதையும் படிங்க : டி20 உ.கோ அணியில் யாரை விளையாட வைக்கலாம். ரிஷப் பண்ட்டா? தினேஷ் கார்த்திக்கா? – ஸ்டெயின் பதில்

அதேபோல் ஜூலை 1இல் நடைபெறும் ஒரு டெஸ்ட் போட்டிக்குப் பின் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மையான இந்திய அணி இங்கிலாந்துக்கு அதன் சொந்த மண்ணில் எதிராக விளையாட உள்ளது. எனவே அந்த 2 வெளிநாட்டு தொடரிலிருந்து தான் டி20 உலக கோப்பையில் விளையாட போகும் இறுதி அணியை ராகுல் டிராவிட் தேர்வு செய்ய உள்ளதாக சௌரவ் கங்குலி கூறியுள்ளார். அந்த வகையில் அந்த தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு பெயர்கள் டி20 உலக கோப்பையில் இடம் பெறப்போவது உறுதியாகியுள்ளது.

Advertisement