மும்பையின் காசு கொடுத்து வாங்கும் ஃபார்முலாவை விட அந்த டீம் தான் எங்க இன்ஸ்பைரேஷன் – குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

Hardik-Pandya
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் எப்போதுமே எதிரணிகள் வியக்கும் அளவுக்கு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன. இருப்பினும் கூட அதில் சச்சின் தலைமையில் ஆரம்பத்தில் கோப்பையை வெல்வதற்கு தடுமாறிய மும்பை ரோகித் சர்மா கேப்டனாக வந்த பின் 2013, 2015, 2017, 2019, 2020 என குறுகிய காலத்தில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது.

ஆனால் கோப்பையை வென்ற சீசன்களை தவிர்த்து நிறைய தருணங்களில் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே தடுமாறியுள்ளது. அதிலும் கடந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் உருவாக்கப்பட்டதால் மெகா ஏலத்துக்காக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டது. அப்போது 5 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய பாண்டியா சகோதரர்கள், ட்ரெண்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்களை மும்பை தக்க வைக்க தவறிய நிலையில் மலிங்கா, பொல்லார்ட் ஆகியோரும் வயதால் ஓய்வு பெற்றனர்.

- Advertisement -

வெற்றிக்கான ஃபார்முலா:
அப்படி முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ரோகித் சர்மா போன்ற இதர முக்கிய வீரர்களும் சுமாராக செயல்பட்டதால் கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆரம்பத்திலேயே 6 தொடர் தோல்விகளை சந்தித்த மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. அதனால் தரமான வீரர்களை வைத்தே ரோகித் சர்மா கோப்பைகளை வென்றதாக ரசிகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக அது போன்ற வீரர்கள் கிடைத்திருந்தால் விராட் கோலி கூட பெங்களூர் அணியின் கேப்டனாக கோப்பையை வென்றிருப்பார் என்று அந்த அணி ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

மறுபுறம் இந்தியாவைப் போலவே 2008 முதல் மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து 4 கோப்பைகளை வென்ற தோனி 13 சீசன்களில் 11 முறை சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றினார். அதாவது என்ன தான் 5 கோப்பைகளை வென்றிருந்தாலும் அதிக வெற்றிகள் மற்றும் பிளே ஆஃப் சுற்றுகள் அடிப்படையில் மும்பையை விட சென்னை வெற்றிகரமான அணியாக காலம் காலமாக ஜொலித்து வருகிறது. அதை விட ஷேன் வாட்சன், மொய்ன் அலி, சிவம் துபே வரிசையில் தற்போது லேட்டஸ்ட்டாக ரகானே போன்ற இதர அணிகளில் தடுமாறிய வீரர்கள் தோனி தலைமையில் அசத்துவதே சென்னையை உண்மையான வெற்றிகரமான அணியாக காட்சிப்படுத்துகிறது.

- Advertisement -

இந்நிலையில் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று இந்த வருடமும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தங்களது குஜராத் டைட்டன்ஸ் அணி தோனி தலைமையிலான சென்னையை உத்வேகமாக வைத்து வெற்றி நடை போட்டு வருவதாக அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். குறிப்பாக தம்மை  போன்ற சிறந்த வீரர்களை காசு கொடுத்து வாங்கி வெற்றிகளை குவிக்கும் மும்பையை விட வீரர்களின் சிறந்து செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றி பாதையில் நடக்கும் சென்னையின் ஃபார்முலாவை தாம் பின்பற்றுவதாக கூறும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

“கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு 2 ஃபார்முலா உள்ளது. ஒன்று மும்பையை போல முழுக்க முழுக்க சிறந்த வீரர்களை ஏலத்தில் வங்குவது போன்றதாகும். மற்றொன்று அனைத்து வகையான வீரர்களையும் ஏலத்தில் வாங்கலாம். ஆனால் அவர்களுக்கு நல்ல உருவாக்கி சென்னையை போல் அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதாகும். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் போது நான் நிறையவற்றை கற்றுள்ளேன்”

- Advertisement -

“ஆனால் வரலாற்றின் மிகச் சிறந்த கேப்டனாக கருதப்படும் தோனியின் தலைமையில் நான் விளையாடிய போது அவர் எனக்கு முழு சுதந்திரத்தையும் நிறையவற்றையும் கற்றுக் கொடுத்துள்ளார். எனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிஎஸ்கே ஒரு உத்வேகமாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : கண்டிப்பா இன்னும் ஒரு வருசத்துக்குள்ள அவர் இந்தியாவுக்கு விளையாடுவதை பார்ப்போம் – இளம் வீரரை பாராட்டிய சேவாக்

இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ள முடியாத மும்பை ரசிகர்கள் உங்களை வளர்த்த நன்றியை மறந்து பேசாதீர்கள் என பாண்டியாவை விமர்சிக்கின்றனர். அதற்கு உண்மையை தானே பாண்டியா பேசுகிறார் என்று சென்னை ரசிகர்கள் வழக்கம் போல பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement