IPL 2023 : கண்டிப்பா இன்னும் ஒரு வருசத்துக்குள்ள அவர் இந்தியாவுக்கு விளையாடுவதை பார்ப்போம் – இளம் வீரரை பாராட்டிய சேவாக்

sehwag
- Advertisement -

இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் இடமாக பார்க்கப்படும் ஐபிஎல் தொடரில் நிறைய இளம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி தங்களது அணியின் வெற்றிகளுக்காக போராடி வருகின்றனர். அந்த வரிசையில் பஞ்சாப் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடும் ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரசிகர்களது பாராட்டுகளை பெற்று வருகிறார். மகராஷ்டிராவை சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக போராடி ஒரு வழியாக கடந்த வருடம் பஞ்சாப் அணிக்கு வெறும் 20 லட்சத்துக்கு விளையாட ஒப்பந்தமானார்.

Jitesh Sharma

- Advertisement -

அந்த சீசனில் 10 இன்னிங்ஸில் 234 ரன்களை 163.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் இந்த வருடம் மீண்டும் அதே 20 லட்சத்துக்கு இதுவரை விளையாடிய 10 இன்னிங்ஸில் 239* ரன்களை 165.97 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் முன்பை விட முன்னேறிய செயல்பாடுகளை செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக தன்னுடைய விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் குறைவான ரன்களை எடுத்தாலும் அதை களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியாக எடுக்கும் அவருடைய பேட்டிங் ஸ்டைல் தான் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

சேவாக் பாராட்டு:
அதை பயன்படுத்தி கடைசி 4 போட்டிகளில் முறையே 25 (7), 24 (10), 21 (10), 49 (27) என குறைவான ரன்களாக இருந்தாலும் அதை அதிரடியாக எடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 4 போட்டிகளில் 200+ ரன்கள் குவித்த முதல் அணியாக பஞ்சாப் சாதனை படைக்க உதவி முடிந்தளவுக்கு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் இந்திய அணியில் ரிஷப் பண்ட் பதிலான மாற்று வீரராக ஜிதேஷ் சர்மா கிடைத்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் சமீபத்தில் பாராட்டினார். அதே போல ரிஷப் பண்ட் இல்லாத சமயத்தில் எந்த நேரத்திலும் ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி சில தினங்களுக்கு முன்பு பாராட்டினார்.

PBKS vs MI Jofra Archer Jitesh Sharma

இந்நிலையில் சிங்கிள் எடுக்காமல் பெரும்பாலும் அதிரடியாக விளையாடும் எண்ணத்துடன் செயல்படும் ஜிதேஷ் சர்மா இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்திய அணியில் விளையாடுவதை பார்க்க முடியும் என்று முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார். சொல்லப்போனால் தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் அவரை 2022 டி20 உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்தேன் என்று சேவாக் தான் முதல் முறையாக ஜித்தேஷ் சர்மாவை கடந்த வருடமே பாராட்டினார். அந்த நிலைமையில் மீண்டும் அவருடைய பேட்டிங்கை பற்றி சமீபத்திய பேட்டியில் சேவாக் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பந்தை பார்த்து அதில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள் என்று நான் எப்போதும் குழந்தைகளிடம் கூறுவேன். குறிப்பாக அடியுங்கள் விடுங்கள் அல்லது தடுங்கள் என்று சொல்வேன். அது தான் பேட்டிங் செய்வதற்கான எளிமையான அடிப்படையாகும். அதைத்தான் ஜிதேஷ் சர்மா செய்து வருகிறார். பந்தை பார்க்கும் அவர் அதை அடிப்பதற்கு ஏற்றவாறு இருந்தால் உடனடியாக சிங்கிள் எடுக்க முயற்சிக்காமல் அதிரடியாக அடிக்கிறார். இந்த டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பந்தை அடிக்காமல் விடக்கூடாது. அந்த விஷயத்தில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்”

Sehwag

“குறிப்பாக மும்பைக்கு எதிரான போட்டியில் பிட்ச் பேட்டிங்கு சாதகமாகவும் எதிரணியின் பந்து வீச்சு கூட்டணி பலவீனமாகவும் இருந்தது. ஆனால் அதை பயன்படுத்தி உங்களுக்கு ரன்கள் எடுக்க தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை இன்று நான் அண்டர்-13 குழந்தைகளுடன் விளையாட சென்றால் கூட ரன்கள் எடுக்க தடுமாறுவேன். ஏனெனில் அவர்கள் பந்து வீச்சில் ரன்கள் எடுக்கும் அளவுக்கு நான் பயிற்சிகளை செய்து உழைக்க வேண்டும். அதைத்தான் ஜிதேஷ் சர்மா அந்த போட்டியில் செய்தார்”

இதையும் படிங்க:PAK vs NZ : 50 வருடத்தில் இல்லாத உச்சம் – இம்ரான், இன்சமாமை மிஞ்சிய பாபர் – புதிய சரித்திரம் படைத்த பாகிஸ்தான்

“அதாவது எதிரணி பந்து வீச்சு பலவீனமாக இருந்தாலும் அதில் நீங்கள் ரன்கள் எடுக்க உழைக்க வேண்டும். அந்த வகையில் அப்போட்டியில் அவருடைய ஷாட் செலக்சன் சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் ஜித்தேஷ் சர்மா கவனம் வைக்கக்கூடிய ஒரு வீரர் என்பதை ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். ஒருவேளை அடுத்த ஒரு வருடத்திற்குள் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும்” என்று கூறினார்.

Advertisement