பரவால்ல என்னோட நேரம் முடிந்தது, இளம் வீரர்கள் விளையாடட்டும் – டி20 உ.கோ இடம் குறித்து நட்சத்திர சீனியர் வீரர் வருத்தத்துடன் பெருமிதம்

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer
- Advertisement -

வரும் அக்டோபரில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்த முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்ஷிப் அனுபவமுள்ள ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்ல இந்தியா தயாராகி வருகிறது. அதற்காக ஐபிஎல் 2022 தொடர் முடிந்ததும் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் 30க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

Dhawan-IND-Team

- Advertisement -

சமீபத்திய ஐபிஎல் தொடரில் திறமையை வெளிப்படுத்திய அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்களுக்கும் திறமையுடன் அனுபவத்தையும் காட்டிய புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்களுக்கும் பாரபட்சமின்றி வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் 500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த நட்சத்திர சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு டி20 அணியில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைப்பதில்லை. கடந்த 2010இல் அறிமுகமாகி 2013இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற இவர் அசத்தலாக செயல்பட்டு இந்திய வெள்ளைப் பந்து அணியில் நிரந்தர தொடக்க வீரராக இடம் பிடித்தார்.

கழற்றிவிடப்பட்ட தவான்:
குறிப்பாக 2013இல் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணியில் தங்க பேட் விருதை வென்ற இவர் 2014, 2015, 2016, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவின் மானசிக ஓப்பனிங் பார்ட்னராக விளையாடினார். கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறிய அவருக்கு பதிலாக அவரின் இடத்தில் வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் அந்த இடத்தை தனதாக்கும் வகையில் அவரை விட அற்புதமாக செயல்பட்டார்.

Dhawan 1

மறுபுறம் 35 வயதை கடந்து விட்டார் என்பதுடன் 500 ரன்களை அடித்தாலும் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவிக்க தடுமாறுகிறார் என்பதை கருத்தில் கொண்ட தேர்வுக்குழு அப்போது முதல் இவரை டி20 போட்டிகளில் கழற்றி விட்டது. ஏற்கனவே 2018க்குப்பின் டெஸ்ட் அணியிலும் இடத்தை இழந்த அவருக்கு கேஎல் ராகுல் – ரோஹித் சர்மா ஆகியோர் இல்லாத நேரங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் அணி நிர்வாகம் வாய்ப்பளித்து வருகிறது.

- Advertisement -

நேரம் முடிந்தது:
அதிலும் ஒரு தொடரில் ஆசையாக கேப்டன்ஷிப் பொறுப்புடன் விளையாடும் அவர் அடுத்த தொடரில் கழற்றி விடப்பட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த அவர் அடுத்ததாக ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார். ஒருவேளை 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்காமல் போனால் அடுத்த வருடம் இவர் ஓய்வு பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.

Shikhar Dhawan Team India

இந்நிலையில் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை என்று தெரிவிக்கும் ஷிகர் தவான் தன்னுடைய நேரம் முடிந்து விட்டதாகவும் தன்னுடைய இடத்தில் இளம் வீரர்கள் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும் ஒருவேளை தாம் ஏதோ ஒரு இடத்தில் சரியாக செயல்படவில்லை என்பதால் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம் என்று மனம் திறந்து நேர்மையுடன் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதற்காக நான் மிகவும் வருத்தமடையவில்லை. பொதுவாக ஒவ்வொருவருக்கும் நேரம் வரும் என்று நான் நினைப்பேன். அந்த வகையில் எனக்கான நேரம் இது கிடையாது என்று கருதுகிறேன். ஒருவேளை ஏதோ ஒரு இடத்தில் நான் சிறப்பாக செயல்படாமலும் இருக்கலாம். எனவே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் என்னால் முடிந்தவற்றை கொடுப்பதே முக்கியம். அதுவரை நான் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். அணியில் எனது பெயர் இடம் பெறவில்லை என்றால் அதற்காக நான் வருத்தமடைந்து கவலைப்படுகிறேன் என்று அர்த்தமில்லை”

Dhawan

“எனக்கு கிடைக்கும் இடைவெளியில் நான் சிறப்பாக செயல்படுகிறேன். ஐபிஎல் தொடரில் விளையாடும் போது நான் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன். அங்கு சிறப்பாக செயல்பட்டால் எனக்கு வாய்ப்பு கிடைக்கலாம் இருப்பினும் அது தேர்வுக்குழுவின் கையில் உள்ளது. ஏற்கனவே கூறியது போல் வாய்ப்பு கிடைத்தால் நல்லது கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இருப்பினும் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் அதில் சிறந்து விளங்க நல்ல உடல் தகுதி மற்றும் பலத்துடன் நான் தயாராக உள்ளேன்” என்று வழக்கம்போல மீசையை முறுக்கிக் கொண்டே கூறினார்.

Advertisement