முன்னாடி வெறுத்தார்கள்…இப்பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் வடஇந்திய ரசிகர்கள்..காரணம் இதுதான் !

dinesh
- Advertisement -

பிற அணிகள் அனைத்தும் கேப்டனை நீயமித்துவிட்ட நிலையில் கொல்கத்தா அணிக்கு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற கருத்து கணிப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் கேட்டுவருகின்றது.

KKR

- Advertisement -

இந்த ஐபிஎல்-இல் கொல்கத்தா அணிக்கு யாரை நியமிக்கலாம் என்று சென்றவாரம் சமூகவலைத்தலங்களில் வாக்கெடுப்பு நடத்தினர். அப்போது தமிழக ரசிகர்கள் மட்டுமே தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக வாக்களித்தனர். வடஇந்தியர்கள் பலரும் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிப்பதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த நிடாஸ்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது. அந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் ஏழாவது வீரராக களமிறங்கி 8பந்துகளில் 29ரன்களை குவித்து கலக்கினார். இவரது ஆட்டம் தான் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.

Robin

இந்நிலையில் அந்த போட்டிக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் ஓவர்நைட்டில் ஹீரோவானார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து தள்ளிவிட்டனர். இதனால் கொல்கத்தா அணிக்கு தற்போது தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக அறிவித்துள்ளது அணி நிர்வாகம்.

- Advertisement -

இதனால் அன்று தினேஷ் கார்த்திக்கை வேண்டாமென்று சொன்ன அனைத்து வட இந்தியர்களும் தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள சிறந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் என்று ஓவர்நைட்டில் பல்டி அடித்து வருகின்றனர். தினேஷ் கார்த்திக்கும் டிவிட்டரில் தமிழனை புரிஞ்சுக்க லேட்டாகும் என்று டிவீட் செய்துள்ளார்.

DK

 

- Advertisement -

 

 

 

Advertisement