0.12 நொடியில் தோனி செஞ்ச ஸ்டம்ப்பிங் உலகிற்கு அப்பாற்பட்டது.. அந்த சப்போர்ட் செய்றாரு.. ஆட்டநாயகன் நூர் பேட்டி

Noor Ahmed
- Advertisement -

சேப்பாக்கத்தில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை போராடி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் டாஸ் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 155-9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31, கேப்டன் சூரியகுமார் 29, தீபக் சஹர் 28* ரன்களை எடுத்தார்கள்.

சென்னை அணிக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 4, கலீல் அஹ்மத் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடிய சென்னை அணிக்கு ராகுல் திரிபாதி 2, சிவம் துபே 9, ஹூடா 3, சாம் கரண் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 53 (26) ரன்கள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ஆட்டநாயகன் நூர்:

அதைப் பயன்படுத்தி மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய சச்சின் ரவீந்திர 65* (45) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 19.1 ஓவரில் இலக்கை எட்டிய சென்னை இந்தத் தொடரை வெற்றிகரமாக துவங்கியது. மும்பை அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட் எடுத்த நூர் அஹ்மத் முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்நிலையில் தமது பந்தில் சூரியகுமாரை 0.12 நொடியில் தோனி ஸ்டம்ப்பிங் செய்தது உலகிற்கு அப்பாற்பட்டது என்று நூர் அஹ்மத் பாராட்டியுள்ளார். அந்த வகையில் கீப்பராக தோனி தமக்கு உதவிகளை செய்வதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தோனியின் சப்போர்ட்:

மேலும் இந்தப் போட்டியில் மும்பையை தோற்கடிக்க பயன்படுத்திய திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் இங்கே விளையாடுவதை ஸ்பெஷலாக உணர்கிறேன். எங்களுடைய அணிக்காகவும் எங்கள் அணியின் வெற்றிக்காக ஆற்றிய பங்கிற்காகவும் மகிழ்ச்சி. பிட்ச்சில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்யும் திட்டத்தில் கவனம் செலுத்தினேன்”

இதையும் படிங்க: தோனி முன்னை விட ஃபிட்.. நான் 3இல் களமிறங்க இதான் காரணம்.. மும்பையை சாய்த்தது பற்றி ருதுராஜ் பேட்டி

“சூரியகுமார் விக்கெட் ஸ்பெஷலானது. அதை எம்எஸ் தோனி ஸ்டம்பிங் செய்த விதம் உலகிற்கு அப்பாற்பட்டது. மஹி பாய் போன்றவர் ஸ்டம்புக்கு பின்னே நின்று எனக்கு உதவி செய்வதை சிறப்பாக உணருகிறேன். அது எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்” என்று கூறினார். மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த சிஎஸ்கே ஸ்பின்னர் என்ற சாதனையையும் நூர் அஹ்மத் தனது முதல் போட்டியிலேயே படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement