நாங்கல்லாம் உங்கள மாதிரி கீழ்த்தரமா மன்கட் செய்யாம அதை செய்வோம் – இந்தியாவுக்கு பட்லர் பதிலடி

Ashwin Buttler Mankad
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் எதிர்ப்புறமிருந்த வெள்ளை கோட்டை தாண்டியதற்காக இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது உலக அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆரம்ப காலம் முதலே நடைமுறையில் இருந்து வரும் இந்த வகையான அவுட் முன்னாள் இந்திய வீரர் மன்கட் பெயரில் அழைக்கப்பட்டதுடன் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால் பவுலர்கள் மட்டும் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தால் நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக ப்ரீ ஹிட் கொடுக்கும் போது பேட்ஸ்மேன்கள் மட்டும் அப்படியொரு விதிமுறையே இல்லாதது போல நடந்து கொள்வது எந்த வகையிலும் நியாயமில்லை என்ற கோட்பாட்டைக் கொண்ட தமிழக வீரர் அஷ்வின் ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மன்கட் செய்தார்.

அதனால் உலக அளவில் மிகப்பெரிய திட்டுக்களை வாங்கிய அவர் தனது கருத்தில் விடாப்பிடியாக நின்றார். மேலும் அதை உலகின் அனைத்து பவுலர்களும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்த அவருடைய குரலில் நியாயம் இருந்ததால் மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி கிரிக்கெட் விதிமுறைகளை நிர்வகிக்கும் எம்சிசி அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. அதை ஐசிசியும் ஏற்றுக்கொண்டதை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் தீப்தி சர்மா நேர்மைக்குப் புறம்பாக செயல்பட்டதாக கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

உங்கள மாதிரி இல்ல:
இருப்பினும் வெற்றி பெறாமலேயே தோற்காத நியூசிலாந்தை அதிக பவுண்டரிகள் அடித்தோம் என்ற விதிமுறையை வைத்து 2019 உலகக் கோப்பையை ஏமாற்றி வென்றதை விட தீப்தி சர்மா செய்தது மோசமல்ல என்று இந்திய பிரபலங்களும் ரசிகர்களும் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் நாங்களாக இருந்தால் மன்கட் செய்யாமல் அது போன்ற நிலைமையில் அவுட்டான வீரரை திரும்ப அழைத்து மீண்டும் விளையாட வாய்ப்பு கொடுப்போம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

அஷ்வின் தம்மை அவுட்டாக்கியதில் ஏற்கனவே கடுப்பில் உள்ள அவர் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்தின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதில் உலக கோப்பை பைனலில் ஒரு இங்கிலாந்து பவுலர் மன்கட் செய்தால் கேப்டனாக அதற்கு ஆதரவு கொடுப்பீர்களா என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நிச்சயமாக இல்லை, நான் பேட்ஸ்மேனை திரும்ப அழைப்பேன். அதை விளையாட்டில் யாரும் பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் எப்போதும் பேட் மற்றும் பந்திருக்கு இடையே சரிசமமான ஆட்டத்தை பார்ப்பதையே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அது (மன்கட்) விரும்பத்தகாத நேரங்களில் நடைபெறுவதாக தெரிகிறது. பேட்ஸ்மேன்கள் தவறு செய்து நன்மையை அனுபவிக்கக் கூடாது என்பதற்காக அது போன்ற விதிமுறைகள் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதில் சில சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

இதே கருத்தை முன் வைக்கும் மற்றொரு இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தியுள்ள இந்த விதிமுறையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டுமென கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “யார் மீதும் கோபம் கொள்ளாத வரை அதை (மன்கட்) நான் எப்போதும் செய்யமாட்டேன் என்று நினைக்கிறேன். விதிமுறைகள் இருப்பதால் அதற்கு உட்பட்டு அனைவரும் அதை செய்யலாம். ஆனால் அதற்காக அது அடிக்கடி செய்யக்கூடிய பொதுவான அவுட்டாக மாறிவிடக் கூடாது என்று நான் நம்புகிறேன்”

- Advertisement -

“மேலும் விக்கெட்டை எடுப்பதற்கு பந்து வீச்சில் நீங்கள் கடினமாக உழைப்பதை விட பேட்ஸ்மேன் வெளியேறுவதை பார்த்து பெயில்ஸை நீக்கி அப்படி ரன் அவுட் செய்வதற்கு எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. அதனால் இதை குழந்தைகளுடன் பூங்காவில் விளையாடும்போது கூட நான் செய்ய மாட்டேன்.

இதையும் படிங்க : என் ஃப்ரண்ட போல யாரு மச்சான், திடீரென பாசத்தை பொழியும் ஜடேஜா – மஞ்சரேக்கர், ரசிகர்கள் வியப்பு

இருப்பினும் நீங்கள் வெள்ளை கோட்டுக்கு உள்ளே நிற்க வேண்டும் என்பதே நியாயம் என்றாலும் அது கடினமானது. ஏனெனில் பவுலர் பந்து வீசுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டு உங்களை அறியாமல் வெளியேறுவீர்கள். என்னைக் கேட்டால் இந்த விதிமுறையை முற்றிலுமாக அகற்ற வேண்டும்” என்று கூறினார்.

Advertisement